பொது செய்தி

தமிழ்நாடு

நிழற்கூரை வேண்டும்

Added : நவ 30, 2019
Advertisement

உடுமலை தளி ரோட்டில், போடிபட்டி பஸ் நிறுத்தத்தில் நிழற்கூரை இல்லாததால், பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர்.காமராஜ்,உடுமலை.முக்கிய ரோடு சேதம்உடுமலை பழநி ரோட்டில் ஐஸ்வர்யா நகர் சந்திப்பில், ரோடு சேதமடைந்து வருகிறது. நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.சோமு,உடுமலை.மண்குவியலால் பாதிப்புஉடுமலை தாராபுரம் ரோட்டில் ஓரங்களில் மண் குவியல் குவியலாக காணப்படுகிறது.
இதனால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகின்றனர்.சங்கர்,உடுமலை.வீணாகும் குடிநீர்வால்பாறை கோ-ஆப்ரேட்டிவ் காலனி, அரசு மருத்துவமனை அருகே குழாய் உடைந்து தண்ணீர் வீணாவதை தடுக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.செந்தில்,வால்பாறை.கடைகள் அகற்றணும்பொள்ளாச்சி, வடக்கிபாளையம் - நடுப்புணி ரோட்டோரத்தில், ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றுவதில், அதிகாரிகள் பாரபட்சமாக நடக்கின்றனர்.
ஆக்கிரமிப்பு கடைகள் அனைத்தையும் அகற்ற வேண்டும்.எம்.மாரிமுத்து,வடக்கிபாளையம்.தெருநாய்கள் தொல்லைபொள்ளாச்சி, கோவில்பாளையம் பகுதியில், தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. ரோட்டில் குறுக்கிடும் நாய்களால் வாகன விபத்துகள் ஏற்படுகிறது.ஏ.விக்னேஸ்,கோவில்பாளையம்.சுகாதாரம் பாதிப்புஆனைமலை, தாத்துார் கிராமத்தில் ஆங்காங்கே குப்பை மலைபோல் குவிந்து கிடப்பதால், சுகாதாரம் பாதிக்கிறது. ஊராட்சி நிர்வாகம் குப்பையை சுத்தப்படுத்த வேண்டும்.என்.லட்சுமி,தாத்துார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X