மாணவர்களுக்கு லேப்-டாப் வினியோகம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்களுக்கு லேப்-டாப் வினியோகம்

Added : நவ 30, 2019

உடுமலை:உடுமலை கல்வி மாவட்டத்தில், 2018-19 பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு பள்ளிகளில் லேப்-டாப்கள் வழங்கப்பட்டன.உடுமலை கல்வி மாவட்டத்தில், 15 அரசு மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில், கல்வியாண்டு தோறும், நான்காயிரம் மாணவர்கள் பிளஸ் 2 முடித்துச்செல்கின்றனர்.மாணவர்களின் உயர்கல்விக்கு பயன்படுத்திக்கொள்ள, அரசின் சார்பில் லேப்-டாப்கள் வழங்கப்படுகின்றன. கடந்த 2017-18ம் கல்வியாண்டில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு லேப்-டாப் வழங்கப்படவில்லை. தொடர்ந்து அடுத்தடுத்த கல்வியாண்டு முடித்த மாணவர்களுக்கும், லேப்-டாப் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.இதனால், மாணவர்கள் அந்தந்த பள்ளிகளின் முன்பு, போராட்டம் நடத்தினர். இதையடுத்து, நடப்பு கல்வியாண்டில், பிளஸ் 2 மட்டுமின்றி, பிளஸ் 1 முடித்த மாணவர்களுக்கும் லேப்-டாப்கள் வழங்கப்பட்டன. உடுமலை கல்வி மாவட்டத்தில், கடந்தாண்டு பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கும் லேப்-டாப்கள் ஒரு மாதத்துக்கு முன்பே, பள்ளிகளுக்கு மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப வழங்கப்பட்டுள்ளன. பள்ளி நிர்வாகத்தினர், மாணவர்களுக்கு அவற்றை வினியோகிக்க கல்வித்துறை உத்தரவுக்கு காத்திருந்தனர். இதையடுத்து, உடுமலை கல்வி மாவட்டத்தில், அரசுப்பள்ளிகளில், கடந்த கல்வியாண்டு பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு லேப்-டாப் வினியோகம் துவங்கியுள்ளது. மாணவர்கள் அவர்களின் சான்றிதழ்களை பள்ளிகளில் பரிசீலனை செய்து, அவற்றை பெற்று சென்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X