பொது செய்தி

தமிழ்நாடு

கால்நடை மருந்தகம் தரம் உயர்த்த கோரிக்கை

Added : நவ 30, 2019
Advertisement

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, வடசித்துார் கால்நடை மருந்தகத்தை மருத்துவமனையாக தரம் உயர்த்த மாவட்ட கலெக்டருக்கு மனு கொடுக்கப்பட்டுள்ளது.கிணத்துக்கடவு நுகர்வோர் நல சங்கம் கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியதாவது:கிணத்துக்கடவு கால்நடை மருந்தகம் நீண்டகாலமாக செயல்படுகிறது. இதற்குட்பட்ட வடசித்துார், கோவில்பாளையம், கப்பளாங்கரை, செங்குட்டுப்பாளையம், ஜக்கார்பாளையம், சொக்கனுார், காட்டம்பட்டி, மெட்டுபாவி, பனப்பட்டி போன்ற கால்நடை மருந்தகங்கள் செயல்பட்டு வருகிறது.இதில், கிணத்துக்கடவு, வடசித்துார் கால்நடை மருந்தகங்களை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். இதில், ஆடு, மாடு, கோழி மற்றும் செல்ல பிராணிகள் வளர்ப்போர் தரம் உயர்த்தபட்ட மருத்துவமனையால் பயன்பெறுவார்கள்.இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X