பொது செய்தி

தமிழ்நாடு

தரமான நாற்றுக்கு குழித்தட்டு முறை

Added : நவ 30, 2019
Share
Advertisement

பொள்ளாச்சி:குழித்தட்டு நாற்றங்கால் அமைக்க மானியம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.வழக்கமாக மேட்டுப்பாத்தி அல்லது அகலப்பாத்தி மூலம் பெறப்படும் நாற்றுகள் மெலிந்து, வீரியம் குறைந்து காணப்படுகிறது. எனவே, நிழல் வலை குடில் அமைத்து குழித்தட்டு நாற்றங்கால் மூலம் நாற்றுகளை உற்பத்தி செய்யும் முறை சிறந்தது. குழித்தட்டுகளில் நன்கு பதப்படுத்தப்பட்ட தென்னை நார்க்கழிவை வளர் ஊடகமாகப் பயன்படுத்தி, நிழல் வலை கூடாரங்களில் நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.நாற்றுகளை நிழல்வலை குடில் அமைத்து வளர்க்கும்போது, செடி வளர தேவையான சூழ்நிலை ஏற்படுத்துகிறது. நிழல்வலை உட்புகும் ஒளியினை கட்டுப்படுத்துவதால் நாற்றுகள் வளர ஏதுவான சூழ்நிலை கிடைக்கிறது.மேலும், இந்த வலைகள் பூச்சி மற்றும் நோய் தாக்குதலின்றி ஆரோக்கியமாக வளர்கின்றன. தென்னை நார் கழிவு அதிகப்படியான ஈரப்பதத்தை தக்கவைத்து சீரான வேர் வளர்ச்சிக்கு உதவுகிறது.பயன்கள்ஒரே சீரான வளர்ச்சி உள்ள நாற்றுகள் உருவாகின்றன. வேரின் வளர்ச்சி சீராக, நன்றாக இருப்பதாலும், நடவு வயலுக்கு கொண்டு செல்லும் போது அதிர்ச்சி இல்லாததாலும், நடவு வயலில் நடவு செய்த பின், பாடுவாசி நாற்று நட வேண்டிய அவசியமில்லை. நாற்றுகள் நடவு வயலில் நட்ட பின் துரிதமாக உயிர்பெற்று வளர்கின்றன. நடவு வயல் தயார் செய்ய காலதாமதமாகும் நிலையில் குழித்தட்டு நாற்றங்கால் சரியான முறை ஆகும். பருவமற்ற காலங்களிலும் நாற்றுகளை உற்பத்தி செய்ய முடியும்.பாதுகாப்பான சூழலில் நாற்றுகளை வளர்ப்பதால் நோய் மற்றும் பூச்சி தாக்குதல்களை கண்காணிப்பது எளிது.மானியம் தேவைபொள்ளாச்சி பகுதியில் தென்னை சாகுபடிக்கு அடுத்தபடியாக காய்கறி சாகுபடி அதிகம் மேற்கொள்ளப்படுகிறது. காய்கறி விவசாயிகள், நல்ல விளைச்சலை பெற உதவும் குழித்தட்டு நாற்றங்கால் அமைக்க தேவையான குழித்தட்டுகள், நிழல்வலை உள்ளிட்ட சாதனங்கள், தோட்டக்கலை துறை மூலம் மானியத்தில் வழங்க வேண்டும் என்று, விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X