பொது செய்தி

தமிழ்நாடு

வெளிவட்ட சாலைக்கு நிலம் எடுப்பதில் சிக்கல்:அதிகாரிகள் இல்லாததால் பணிகள் முடங்கும் அபாயம்

Added : நவ 30, 2019
Share
Advertisement
வண்டலுார் முதல் மீஞ்சூர் வரையிலான வெளிவட்டசாலை திட்டத்துக்கு, நிலம் கையகப்படுத்தும் பணிகள், அதிகாரிகள் இல்லாததால், முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சென்னையின் வாகன போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக, வண்டலுார் முதல் மீஞ்சூர் வரை, 62 கி.மீ.,க்கு வெளிவட்ட சாலை அமைக்கப்படுகிறது.காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், பல்வேறு கிராமங்களில், இதற்கான நிலம்

வண்டலுார் முதல் மீஞ்சூர் வரையிலான வெளிவட்டசாலை திட்டத்துக்கு, நிலம் கையகப்படுத்தும் பணிகள், அதிகாரிகள் இல்லாததால், முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னையின் வாகன போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக, வண்டலுார் முதல் மீஞ்சூர் வரை, 62 கி.மீ.,க்கு வெளிவட்ட சாலை அமைக்கப்படுகிறது.காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், பல்வேறு கிராமங்களில், இதற்கான நிலம் கையகப்படுத்தப்படுகிறது.நிலம் கையகப்படுத்தும் பொறுப்பு, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ.,விடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. இதற்காக, சி.எம்.டி.ஏ.,வில், தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டது.இந்த பிரிவில், மாவட்ட வருவாய் அலுவலர், வட்டாட்சியர், சர்வேயர், எழுத்தர் போன்ற பணியிடங்கள் உருவாக்கப் பட்டன. வெளிவட்ட சாலை தொடர்பான பெரும்பாலான பணிகள் முடிந்த நிலையில், 14 இடங்களில் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன.இந்த வழக்குகள் தொடர்பான நிர்வாக பணிகளை கவனிக்கும்பிரிவில், வருவாய் பணியாளர்கள் இல்லை. தற்போதைய நிலவரப்படி, ஒரு வட்டாட்சியர்மட்டுமே உள்ளார். மற்ற நிலைகளில், ஒன்பது பணியிடங்கள், சில மாதங்களாக காலியாக உள்ளன.இதற்கு உரிய நபர்களை, அயல்பணி அடிப்படையில் அனுப்புமாறு, திருவள்ளூர் மாவட்ட கலெக்டருக்கு, சி.எம்.டி.ஏ.,வின் நிலம் கையகப்படுத்துதல் பிரிவு கடிதம் எழுதி உள்ளது.

இது தொடர்பாக, உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி, வெளிவட்ட சாலை திட்டத்தை செயல்படுத்தும் அமைப்பான, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்துக்கும், சி.எம்.டி.ஏ., கடிதம் எழுதி உள்ளது.வருவாய் துறையில் இருந்து பணியாளர்கள் அனுப்பப்படாத நிலையில், நிலம் கையகப்படுத்தும் பணிகள் பாதியில் முடங்கும் என்று கூறப்படுகிறது. இதனால், இறுதி கட்டத்தில் வெளிவட்ட சாலை பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X