பொது செய்தி

தமிழ்நாடு

எம்பெருமான் யோகி ராமன்!

Added : நவ 30, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
திருவண்ணாமலை, இது சித்தர் பூமி, சிவ பூமி. ஆன்மிகத்தின் மீது பித்தானவர்களை, தன்பால் ஈர்த்து, அணைத்துக் கொள்ளும் சத்தான பூமி. சாதகர்களுக்கு சாதகமான பூமி. சாதுக்கள் நிறைந்த பூமி.எங்களின் இறைவன், எம்பெருமான் யோகி ராம்சுரத்குமார் வாழ்ந்த, வாழும் அற்புதமான பூமி. இந்த திருவண்ணாமலையிலேயே நான் பிறந்து வளர்ந்தாலும், எம்பெருமான் யோகி ராமனை, முழுவதுமாய் சரணடைய, 23 ஆண்டுகள் கடந்து

திருவண்ணாமலை, இது சித்தர் பூமி, சிவ பூமி. ஆன்மிகத்தின் மீது பித்தானவர்களை, தன்பால் ஈர்த்து, அணைத்துக் கொள்ளும் சத்தான பூமி. சாதகர்களுக்கு சாதகமான பூமி. சாதுக்கள் நிறைந்த பூமி.எங்களின் இறைவன், எம்பெருமான் யோகி ராம்சுரத்குமார் வாழ்ந்த, வாழும் அற்புதமான பூமி.

இந்த திருவண்ணாமலையிலேயே நான் பிறந்து வளர்ந்தாலும், எம்பெருமான் யோகி ராமனை, முழுவதுமாய் சரணடைய, 23 ஆண்டுகள் கடந்து போக வேண்டி இருந்தது.முதன் முதலாக நான், யோகியாரை விபரம் ஏதும் தெரியாத, சின்னஞ்சிறு வயதில் தான் பார்த்திருக்கிறேன். அப்போது எனக்கு, 5 அல்லது 6 வயதிருக்கலாம்.எங்களின் வீடு இருக்கும் தெருவிலிருந்து சில தெருக்கள் மட்டுமே தள்ளி, யோகி ராமனின் வீடு இருந்தாலும், மீண்டும் அவரை தரிசனம் செய்ய, மேலும் பல ஆண்டுகள் கடந்து போனது.மகான்களை தரிசனம் செய்யும் மனிதர்களின் வாழ்வில், அவர்களை அறியாமலேயே, பல உன்னதமான மாற்றங்கள் நிகழும். நம்மால் நம்ப முடியாதபடி பல பல அற்புதங்கள், நம் வாழ்வில் நடக்கும்; எனக்கும் நடந்தது.பல ஆண்டுகளாக என் உடல் நலனில் இருந்த பிரச்னையை சில நிமிடங்களிலேயே காணாமல் போகச் செய்த சித்தர், யோகி ராமன்.கடந்த, 25 ஆண்டுகளுக்கு முன், பகவான் யோகி ராம்சுரத்குமாரால், சில நிமிட நேரத்தில், தீர்த்து வைக்கப்பட்ட அந்த பிரச்னை, இந்த வினாடி வரை என்னிடம் இல்லை.எனக்கு, 6 அல்லது 7 வயது இருக்கும்போதே, சுவாசக் கோளாறு பிரச்னை இருந்தது. சில நேரங்களில் மூச்சு விடுவதில் மிகுந்த சிரமம் இருக்கும்; சுவாசிக்கவே முடியாது; மூச்சை அடைக்கும். சில நேரங்களில், வாயை திறந்தபடி, சுவாசம் செய்ய வேண்டிய சூழ்நிலைகள் கூட ஏற்பட்டது.டாக்டர்களிடம் காட்டிய போது, சுவாசப் பாதையில் ஒரு சிறு அடைப்பு இருப்பதாகவும், ஆப்பரேஷன் மூலம் சரி செய்து விட முடியும் என்றனர்.

ஆனால், ஆப்பரேஷன் செய்யும் அளவுக்கு, இப்போதைய உடல் நிலை இல்லை.பிரச்னைபிரச்னை வரும்போது, மருந்து, மாத்திரைகள் மூலம், பிரச்னையை தள்ளிப் போட்டு வந்தாயிற்று. வயதும், 23 ஆகி விட்டது. வயது கூடியது போல் பிரச்னையும் கூடியது, எப்போதாவது இருந்த பிரச்னை, இப்போது அடிக்கடி தொல்லை கொடுக்க ஆரம்பித்தது.வேறு வழியே இல்லை; ஆப்பரேஷன் செய்ய வேண்டியது தான் என்று முடிவு செய்து, புதுச்சேரி கோரிமேடு மருத்துவமனைக்கு சென்றோம். டாக்டர்கள் பரிசோதித்தனர்.'ஆப்பரேஷன் செய்து தான் ஆகணும். சின்ன ஆபரேஷன் தான்; பயப்படறதுக்கு ஒண்ணுமே இல்லை. 'ஆப்பரேஷன் பண்ணின மறுநாளே நீங்க டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு போயிடலாம். அடுத்த வாரம் வந்து, மருத்துவமனையில், 'அட்மிட்' ஆகிக் கொள்ளுங்கள்' என்றார் டாக்டர்.

இப்படியே, ஒவ்வொரு வாரமும் போவோம். ஏதோ காரணம் சொல்வர்; திரும்பி விடுவோம். சில வாரங்களுக்கு பின், ஆப்பரேஷன் செய்ய நாளை முடிவு செய்து, டாக்டர்கள் உறுதியாக சொல்லி விட்டனர்.எனக்கு, ஆப்பரேஷன் செய்ய தேதி குறிப்பிட்டிருந்த தினத்துக்கு முன்தினம், யோகியை தரிசனம் செய்வதற்காக, அவரின் சன்னதி தெரு இல்லத்திற்கு சென்றேன். மதியம், 3:30 மணி இருக்கும். யோகி வீட்டுக்கு வெளியே யாரும் இல்லை.கம்பிக் கதவு மூடியிருந்தது. யோகி படுத்திருந்தார். எதிரே சசி, ராம்சுரத்குமாருக்கு விசிறிக் கொண்டிருந்தார். நான் படிக்கட்டுக்கு வெளியே நின்றபடி யோகியை நமஸ்கரித்தேன்.என்னைப் பார்த்ததும் சசி, யோகியிடம், 'வேணுகோபால் வந்திருக்கிறார்' என்று சொல்ல, யோகியும் ன்னை உள்ளே அழைத்தார். உள்ளே, யோகி, சசி, நான் தவிர யாரும் இல்லை; ஒரே அமைதி. இது நாள் வரை யோகியிடம் என் சுவாசக் கோளாறு பிரச்னையைப் பற்றி சொன்னதில்லை. திடீரென ஒரு எண்ணம். இதைப் பற்றி, அவரிடம் சொன்னால் என்ன; இப்போது தான் யாரும் இல்லையே என, நினைத்து, 'பகவான்...' என, மெல்ல அழைத்தேன்.'என்ன...' என்றார்.யோகி ராமனின் குரலை கேட்டு இருக்கிறீர்களா... மழலையின் குரலைப் போல அவ்வளவு அழகாக இருக்கும்.'நாளைக்கு, புதுச்சேரி போகப் போறேன் பகவான்' என்றேன். 'என்னத்துக்கு...' என்றார். 'ஆப்பரேஷன் பண்ணணும் பகவான்' என்றேன். படுத்திருந்தவர், சடக்கென துள்ளி எழுந்து, உட்கார்ந்தார்.'யாருக்கு ஆப்பரேஷன்; எதுக்கு ஆப்பரேஷன்? என்றார். 'எனக்குத் தான் பகவான். மூக்குல பிரச்னை ஒண்ணு' என்றேன். 'என்ன பிரச்னை?' என்றார்.என்னுடைய சுவாசக் கோளாறு பிரச்னையை, யோகியிடம் விளக்கமாக எடுத்துச் சொன்னேன். 'ஓ... அவ்வளவு பிரச்னை இருக்கா?' என்று சொல்லி, சில நிமிடங்கள் அமைதியாக இருந்தவர், 'கிட்ட வாங்க தம்பி' என்றார்.யோகியின் எதிரில் உட்கார்ந்து கொண்டிருந்த நான், இன்னும் சற்று நெருங்கி, அவரின் எதிரே நெருக்கமாக உட்கார்ந்தேன். என் மூக்குப் பகுதியையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த யோகி, 'பிரச்னை, கரெக்டா எந்த இடத்துல இருக்குனு சொல்லுங்க தம்பி' என்றார்.மாற்றம் தெரியுதுநானும் சொன்னேன். யோகி ராம்சுரத் குமார், தன் வலது கையின் விரல்களால், மயில் இறகை கொண்டு வருடுவது போல், மூக்கை வருடிவிட்டார்; வருடி விட்டு, 'சரி...' என்றார். நான் மீண்டும், என் இடத்தில் வந்து அமர்ந்தேன். சில நிமிடங்கள் சென்றன.'பகவான்...' என்றேன். 'என்ன?' என்றார். 'நாளைக்கு புதுச்சேரி போகணுமா பகவான்?' என, கேட்டேன். 'ஆமா... போகணும்' என்றார்.மறுநாள், புதுச்சேரி கோரிமேடு மருத்துவமனை டாக்டர்கள் முன் இருந்தேன். என்னை பரிசோதித்த அவர்கள், 'போய், 'பெட்' அட்மிட் ஆகிடுங்க, நாளைக்கு ஆப்பரேஷன் பண்ணிடலாம்' என்றனர்.டாக்டர்களின் அறையை விட்டு வெளியே வந்து, சில அடி துாரம் நடந்திருப்பேன். டாக்டர்கள் அழைப்பதாக ஒருவர் என்னிடம் சொல்லவே, திரும்பிச் சென்றேன். 'உட்காருங்க' என்றனர்.

என்னை மீண்டும் சோதித்துப் பார்த்தனர். அவர்களுக்குள் பேசிக் கொண்டனர். 'நீங்கள் இங்கு வந்து போன பின், வேற எங்கேயாவது, 'ட்ரீட்மென்ட்' எடுத்தீங்களா?' என்றனர். 'இல்லையே, ஏன் இப்படி கேக்கறீங்க' என்றேன்.'நீங்க இதுக்கு முன்னாடி வந்தப்ப இருந்ததற்கும், இப்ப இருக்கிறதுக்கும் உங்க சுவாசப் பாதையில மாற்றம் தெரியுது' என்றனர். 'மாற்றமா?' என்றேன். ஒரு பேப்பரை எடுத்து, படம் வரைந்து காண்பித்தார்.'முதல் படத்துல, சுவாசம் போற பாதை அடைபட்டு இருக்கு. இங்க வர்றதுக்கு முன்னாடி, இப்படித் தான் இருந்தது. இப்ப, இரண்டாவது படத்தில் சுவாசப் பாதையில இடைவெளி தெரியுது. ஆப்பரேஷன் பண்ண வேண்டிய அவசியமே இல்லை' என்றார் டாக்டர். 'என்ன டாக்டர் சொல்றீங்க... நிஜமாவா?' என்றேன். 'ஆமாங்க. மாற்றம் தெரியுது. இதற்கு முன் இப்படி இல்லை. இப்பத் தான் இருக்கு. இந்த மாற்றம் திடீர்னு எப்படி வந்ததுன்னு எங்களுக்கு புரியலே' என்றார் டாக்டர்.

எனக்குப் புரிந்து விட்டது. என் மனம் உரக்கக் கூவியது, 'யோகி ராமா' என்று! கண்களில் இருந்து நீர் கசிந்தது. சத்தியம்'எல்லா மாற்றங்களையும் செய்து விட்டு, எதுவும் நிகழாதது போல, அமைதியாய் வீற்றிருக்கும் யோகி ராமா, உன்னையன்றி வேறு யார், எனக்கு கடவுளாக இருக்க முடியும்...' என, மனதுக்குள் கூறிக் கொண்டேன்.நண்பர்களே... இதில் இருக்கும் ஒவ்வொரு வரியும், சத்தியம். என் வாழ்க்கையில், அப்படியே நடந்த விஷயம். மாயம் இல்லை; மந்திரம் இல்லை. இதுபோல, பலரின் வாழ்க்கையில் நிறைய மாற்றங்களை அவர் செய்துள்ளார். என்னைப் போல, பலர் சாட்சிகளாக இருக்கின்றனர்.
- ஆர்.வேணுகோபால் -தொடர்புக்கு: 04175-237597

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramachandran Rajagopal - Sundivakkam,இந்தியா
01-டிச-201909:24:33 IST Report Abuse
Ramachandran Rajagopal இப்படிப்பட்ட யோகி ராம் சூரத் குமார் அவர்கள் மேல்மருவத்தூரில் வாழும் பங்காரு அடிகளாரிடம் என்ன சக்தி இருக்கிறது என சோதித்துப் பார்த்து அவருடைய திருவடியை யோகி ராம் சூரத் குமார் அவர்கள் பற்றினார். இதனை படமாக எடுத்ததை மேல்மருவத்தூரில் தரிசனத்திற்கு வரிசையில் செல்லும்போது பார்க்கலாம். திருவண்ணாமலையில் அடிகளார் எடைக்கு எடை வெள்ளி வழங்க வேண்டும் என அமைக்கப் பட்டிருந்த மேடையில் இந்த வரலாறு நடந்தது. எனவே பங்காரு அடிகளார் தான் பராசக்தியின் ஸ்தூல வடிவம் என காஞ்சியில் வாழ்ந்த சந்திரா சேகரேந்திரர் சொன்னது உண்மை. அதனால்தான் இந்த பிரபஞ்சத்தில் யாரும் மகளிருக்கும் அடிமட்டத்தில் உள்ள சூத்திரர்களுக்கும் ஆன்மீகப் பணிகளில் முக்கியத்துவம் அளிக்காத நிலையில் பங்காரு வடிவம் தாங்கி வந்துள்ள பராசக்தி அளித்து வருகிறார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X