பொது செய்தி

தமிழ்நாடு

14 கட்டுமான நிறுவனங்கள் மேல் முறையீடு: உயர் நிலை குழு நாளை ஆய்வு

Added : நவ 30, 2019
Share
Advertisement
சென்னை:சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ., மற்றும் மாநகராட்சியால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட, 14 நிறுவனங்களின் மேல் முறையீட்டு மனுக்களை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, நாளை ஆய்வு செய்ய உள்ளது.நகர், ஊரமைப்பு சட்டத்தின் அடிப்படையில் வகுக்கப்பட்ட வளர்ச்சி விதிகள், பொது கட்டட விதிகள் ஆகியவற்றுக்கு உட்பட்டு வரும் விண்ணப்பங்களை ஆய்வு செய்து,

சென்னை:சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ., மற்றும் மாநகராட்சியால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட, 14 நிறுவனங்களின் மேல் முறையீட்டு மனுக்களை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, நாளை ஆய்வு செய்ய உள்ளது.

நகர், ஊரமைப்பு சட்டத்தின் அடிப்படையில் வகுக்கப்பட்ட வளர்ச்சி விதிகள், பொது கட்டட விதிகள் ஆகியவற்றுக்கு உட்பட்டு வரும் விண்ணப்பங்களை ஆய்வு செய்து, கட்டுமான திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படும். இதில் விண்ணப்பங்கள், வரைபடங்களில் சிறிய அளவில் மாறுதல் தேவைப்பட்டால், அது குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு தெரிவிக்கப்படும்.சிறிய அளவிலான குறைபாடுகளை திருத்த, அவகாசம் வழங்கப்படும். சில சமயங்களில் புதிய விண்ணப்பங்கள் பெறப்படும்.அதேநேரத்தில், விதிகளுக்கு உட்படாத விண்ணப்பங்களை, நகர், ஊரமைப்பு சட்டப்படி அதிகாரிகள் நிராகரிக்க வேண்டும்.இவ்வாறு நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு உரிய நிறுவனங்கள், மேல் முறையீடு செய்ய உரிமையுண்டு.

இவ்வகையில், சி.எம்.டி.ஏ.,வும், சென்னை மாநகராட்சியும், 14 நிறுவனங்களின் திட்ட அனுமதி கோரும் விண்ணப்பங்களை நிராகரித்துள்ளன. அதனால், இந்நிறுவனங்கள், அரசிடம் மேல் முறையீடு செய்துள்ளன.இத்தகைய மேல் முறையீடுகளை ஆய்வு செய்ய, வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை செயலர் தலைமையில், உயர் நிலை குழு அமைக்கப் பட்டுள்ளது.இந்தக் குழுவானது, மேல் முறையீடுகளை நாளை ஆய்வு செய்ய உள்ளது. அதிலும், விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், கட்டுமான திட்டங்களை கைவிட வேண்டிய நிலை ஏற்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X