பொது செய்தி

தமிழ்நாடு

மருத்துவ உபகரணங்களால் எதிர்விளைவு அறிக்கை தரும்படி மத்திய அரசு உத்தரவு

Added : நவ 30, 2019
Advertisement

சென்னை: மருத்துவ உபகரணங்களை பயன்படுத்தும் போது, அவற்றில் ஏதேனும் எதிர்விளைவுகள் ஏற்பட்டால், அறிக்கை அளிக்கும்படி, அனைத்து மாநிலங்களுக்கும், மத்திய மருந்து தரக் கட்டுப்பாடு வாரியம் அறிவுறுத்தி உள்ளது.

நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான, மருந்து, மாத்திரைகளையும், மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாடு வாரியங்கள் ஆய்வு செய்கின்றன. அதில், போலி மருந்துகள் கண்டறியப்பட்டால், நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது .இந்நிலையில், மருந்துகளின் தரத்தை உறுதி செய்ய, ஒழுங்குமுறை விதிகள் இருந்தாலும், மருத்துவ உபகரணங்களுக்கு, இத்தகைய விதிகள் இல்லை.அதனால், நாட்டில் விற்பனையில் உள்ள, 80 சதவீதம் உபகரணங்கள், ஒழுங்குமுறைப் படுத்தப்படாமல் உள்ளன. இதனால், பல்வேறு எதிர்விளைவுகள் ஏற்படுகின்றன.

மருந்து, மாத்திரைகளால் அதீத ஒவ்வாமையோ, எதிர்விளைவோ எற்படும்பட்சத்தில், அதுகுறித்த விபரங்கள் அடங்கிய அறிக்கையை, சம்பந்தப்பட்ட மாநிலங்கள், மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு அளிக்க வேண்டும்.அதேபோல், மருத்துவ உபகரணங்களையும், ஒழுங்குமுறை விதிகளில் கொண்டு வர, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, மருத்துவ உபகரணங்களால் ஏற்படும், எதிர்விளைவுகளை கண்டறிந்து, அதுதொடர்பான அறிக்கையை அளிக்கும்படி, அனைத்து மாநிலங்களுக்கும், மத்திய மருந்து தரக் கட்டுப்பாடு வாரியம் அறிவுறுத்திஉள்ளது. இதற்காக, டாக்டர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த வல்லுனர் குழுவை ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X