வாக்குச்சாவடியில் துப்பாக்கி காட்டி மிரட்டிய காங்., வேட்பாளர்

Updated : நவ 30, 2019 | Added : நவ 30, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
ராஞ்சி:ஜார்க்கண்டில் முதற்கட்டமாக இன்று நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் வாக்குப் பதிவின் போது காங்கிரஸ் வேட்பாளர் திரிபாதி வாக்குச்சாவடிக்கு துப்பாக்கியுடன் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.ஜார்க்கண்டின் கோஷியாரா கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில், காங்கிரஸ் வேட்பாளர் திரிபாதி - பாஜக வேட்பாளர் அலோக் சவ்ராசியா ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது,

ராஞ்சி:ஜார்க்கண்டில் முதற்கட்டமாக இன்று நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் வாக்குப் பதிவின் போது காங்கிரஸ் வேட்பாளர் திரிபாதி வாக்குச்சாவடிக்கு துப்பாக்கியுடன் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.



latest tamil news




ஜார்க்கண்டின் கோஷியாரா கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில், காங்கிரஸ் வேட்பாளர் திரிபாதி - பாஜக வேட்பாளர் அலோக் சவ்ராசியா ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, அங்கு சென்ற திரிபாதி, பாஜக ஆதரவாளர்களை வாக்குச்சாவடியினுள் நுழைய விடாமல் தடுத்ததாக கூறப்பட்டது. இதனால், பாஜக - காங்கிரஸ் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது.


latest tamil news



அப்போது, தனது கையில் வைத்திருந்த துப்பாக்கியால், பாஜக தொண்டர்களை சுட்டுவிடுவேன் என திரிபாதி மிரட்டினார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி ஷைலேஷ் சவ்ராசியா கூறுகையில், இந்த விவகாரம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட தேர்தல் அதிகாரி கேட்டுக் கொள்ளப்பட்டார். திரிபாதியின் வசம் இருந்து துப்பாக்கி கைப்பற்றப்பட்டது என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
01-டிச-201908:29:35 IST Report Abuse
blocked user காங்கிரஸ்காரன் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X