அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., விதிகளில் திடீர் மாற்றம்

Added : நவ 30, 2019
Advertisement

'உட்கட்சி தேர்தலில் போட்டியிட, ஐந்து ஆண்டுகள் கட்சியில் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும்' என, அ.தி.மு.க., சட்ட விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதால், அ.ம.மு.க.,வில் இருந்து விலகி, மீண்டும் சேர்ந்தவர்கள், 'அப்செட்' ஆகியுள்ளனர்.
அதிருப்தி
அ.தி.மு.க.,வில் அணிகள் இணைந்த பின், பொதுச் செயலர் பதவி நீக்கப்பட்டது. அதற்கு பதிலாக, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் உருவாக்கப்பட்டன. ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக இ.பி.எஸ்., துணை ஒருங்கிணைப்பாளர்களாக கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.அ.தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்ட தினகரன், அ.ம.மு.க., என்ற கட்சியை துவக்கினார். மந்திரிகள் மீது, அதிருப்தியில் இருந்தவர்கள், அ.ம.மு.க., சென்றனர். அவர்களுக்கு, அக்கட்சியில் முக்கிய பதவிகள் வழங்கப்பட்டன.ஆனால், லோக்சபா தேர்தலில், அ.ம.மு.க., படுதோல்வியை சந்தித்தது. அதன்பின், அ.ம.மு.க., நிர்வாகிகள், மீண்டும், அ.தி.மு.க.,விற்கு வந்தனர். தினமும் ஏராளமானோர், தாய் கட்சிக்கு திரும்பியபடி உள்ளனர். அ.ம.மு.க.,வில், மாவட்ட செயலர்களாக இருந்தவர்களும், தற்போது, அ.தி.மு.க.,வில் அடிப்படை உறுப்பினராக சேர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், சமீபத்தில் நடந்த, அ.தி.மு.க., பொதுக்குழுவில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் உட்பட, கட்சியில் அனைத்து பதவிகளுக்கும் போட்டியிட, ஐந்து ஆண்டுகள் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும் என்று, கட்சி சட்ட விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டது.கலக்கம்இது, அ.ம.மு.க., உட்பட பல்வேறு கட்சிகளிலிருந்து, அ.தி.மு.க.,வில் இணைந்தவர்களுக்கு, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விதியை காரணம் காட்டி, கட்சி பதவி தர மறுப்பரோ என்ற, சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும், உள்ளாட்சி தேர்தல் மற்றும் 2021 சட்டசபை தேர்தலில், வாய்ப்பு மறுக்கப்படுமோ என, கலக்கம் அடைந்துஉள்ளனர்.

இது குறித்து, அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:இந்த சட்ட விதி, ஏற்கனவே உள்ளது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர்கள் பதவி புதிதாக உருவாக்கப்பட்டதால், அவற்றுக்கும், அந்த விதியை கொண்டு வந்துள்ளனர்.ஏற்கனவே, அ.தி.மு.க.,வில் இருந்து, வேறு கட்சிக்கு செல்லும் போது, அவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படுவர். மீண்டும் இணைந்த பின், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நீக்கம் ரத்து செய்யப்பட்டால், அவர்களின், 'சீனியாரிட்டி' கட்சியில் தொடரும்; பெரும்பாலும் அவ்வாறே செய்வர். இதனால், முக்கிய நபர்களுக்கு, பதவி வழங்குவதில், எந்த சிக்கலும் ஏற்படாது.அ.தி.மு.க.,வில் இல்லாமல், புதிதாக வருவோருக்கு தான் சிக்கல் ஏற்படும். அவர்களுக்கும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் நினைத்தால், பதவி வழங்க அதிகாரம் உள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X