பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி வளாகத்தில் 400 மரக்கன்றுகள் சுற்றுச்சுவர் அமைக்க வலியுறுத்தல்

Added : நவ 30, 2019
Advertisement

பொள்ளாச்சி:பொள்ளாச்சி, ஆண்டிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில், 400 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு, பராமரிக்கப்படுகின்றன.பொள்ளாச்சி அருகே, ஆண்டிபாளையத்தில் அரசு உயர் உயர்நிலைப்பள்ளியில், இரண்டு ஏக்கர் பரப்பளவில் திறந்தவெளி மைதானம் உள்ளது.விளையாட்டு மைதானம் சீராக இல்லாததால், மாணவர்கள் விளையாடுவதற்கு பயன்படுத்துவதில்லை. மாறாக, உள்ளூர் மக்கள் வளர்க்கும் கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலமாக உள்ளது.இதனால், மைதானத்தை சுற்றிலும் மரக்கன்றுகள் வளர்த்து, பராமரிக்க முடியாத நிலை இருந்து வருகிறது. இந்நிலையில், நெகமம் யூனியன் வங்கி நிர்வாகம் சார்பில், பள்ளி வளாகத்தில், மகாகனி, வாகை, பூவரசு, மற்றும் அரசமரம் என, 400 நாற்றுகள் நடவு செய்யப்பட்டன.நாற்றுகளை பாதுகாக்க, முதற்கட்டமாக, 40 நாற்றுகளுக்கு பாதுகாப்பு வளையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.தலைமையாசிரியர் துரைசாமி கூறுகையில், ''ஏற்கனவே பள்ளி வளாகத்துக்கு பாதுகாப்பு இல்லை. ஆடு, மாடுகள் மட்டுமின்றி, மது அருந்துபவர்களும் பள்ளி வளாகத்தை பயன்படுத்துகின்றனர்.'குடிமகன்'கள் காலி பாட்டில்களை உடைத்து, மைதானத்தில் வீசிச் செல்கின்றனர்.இந்நிலையில், 400 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. சுற்றுச்சுவர் அல்லது வேலி இல்லாததால், இவற்றை பாதுகாப்பதில் சிக்கல் உள்ளது. எனவே, பள்ளி வளாகத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X