பொது செய்தி

தமிழ்நாடு

சீரான அகவிலைப்படி வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்: வரும், 13ல் கோவையில் நடக்கிறது

Added : நவ 30, 2019
Advertisement

பொள்ளாச்சி:ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஒரே சீரான அகவிலைப்படி வழங்க வலியுறுத்தி, வரும், 13ம் தேதி கோவையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்க மாநில தலைவர் ராஜேந்திரன் கூறியதாவது:தமிழக அரசால், கூட்டுறவு துறை மூலம் நடத்தப்படும் ரேஷன் கடை பணியாளர்களுக்கு, கடந்த, 2015, நவ., 9ல் ஊதியம் குறித்த அரசாணை (எண்: 137) வெளியிடப்பட்டது.அதில், தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி, ரேஷன்கடை ஊழியர்களுக்கும் பொருந்தும் என, குறிப்பிடப்பட்டது. அதுவே நடைமுறையிலும் உள்ளது.கடைசியாக, ரேஷன்கடை ஊழியர்களுக்கு, கடந்த அக்., 30ம் தேதி அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. இதன்படி தற்போது, 104 சதவீத அகவிலைப்படி வழங்கப்படுகிறது.தமிழகத்தில் பல மாவட்டங்களில் அரசு அறிவித்த அகவிலைப்படி ரேஷன் கடை பணியாளர்களுக்கு சீராக வழங்கப்படுவதில்லை.இந்த குளறுபடி குறித்து, அரசு செயலர் மற்றும் மாநில பதிவாளரிடம் முறையிடப்பட்டுள்ளது.இதை முறைப்படுத்தி, ரேஷன் கடை பணியாளர்களுக்கு, 104 சதவீத அகவிலைப்படியுடன், நிலுவையில் உள்ள, 10 சதவீதத்தை சேர்த்து, 114 சதவீத அகவிலைப்படியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை சீராக வழங்க வலியுறுத்தி, வரும், 13ம் தேதி கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு, தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X