பொது செய்தி

தமிழ்நாடு

எய்ட்ஸ் இல்லாத நிலையை உருவாக்க முதல்வர் அழைப்பு

Added : நவ 30, 2019
Advertisement

சென்னை:'தமிழகத்தில், எய்ட்ஸ் தொற்று இல்லாத நிலையை உருவாக்க, உறுதி ஏற்போம்' என, முதல்வர் இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.

உலக எய்டஸ் தினத்தை ஒட்டி, அவர் வெளியிட்ட செய்தி:எய்ட்ஸ் குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, ஆண்டுதோறும், டிசம்பர், 1ல் உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான, உலக எய்ட்ஸ் தினத்தின் மையக் கருத்து, 'சமூக பங்களிப்பின் மூலம், எச்.ஐ.வி., மற்றும் எய்ட்ஸ் தடுப்பு பணியில் மாற்றத்தை ஏற்படுத்துதல்' என்பதாகும். எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டோர் புறக்கணிக்கப்படக் கூடாது என்ற, உயரிய நோக்கில், அரசு பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்துகிறது. தமிழகத்தை பொறுத்தவரை, எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்த, தனிக் கவனம் செலுத்தப்படுகிறது

.எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டோருக்கு, சிகிச்சை அளிக்க, 55 கூட்டு மருந்து சிகிச்சை மையங்கள், 174 இணைப்பு கூட்டு மருந்து சிகிச்சை மையங்கள், வட்டார அளவில் செயல்படுகின்றன.எச்.ஐ.வி., தொற்றுள்ள பெற்றோரிடமிருந்து, கருவில் உள்ள குழந்தைகளுக்கு, நோய் பரவாமல் தடுக்க, அனைத்து கருவுற்ற பெண்களுக்கும், சிறப்பு மருத்துவ சிகிச்சை, அரசு மருத்துவமனைகளில் அளிக்கப்படுகிறது.

எய்ட்ஸ் நோய் குறித்து, மாணவர்கள் மற்றும் பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. தமிழகத்தில், எய்ட்ஸ் தொற்று இல்லாத நிலையை உருவாக்க, உறுதி ஏற்போம். எய்ட்ஸ் தொற்றுள்ளோரை, பரிவுடன் அரவணைத்து, சம உரிமை அளித்து, அவர்களின் தன்னம்பிக்கை வளர உதவிட வேண்டும்.இவ்வாறு, முதல்வர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X