கொமரலிங்கத்தில் ஆக்கிரமிப்பு நெரிசலில் தவிக்கும் மக்கள்

Added : நவ 30, 2019
Advertisement

மடத்துக்குளம்:மடத்துக்குளம் அருகே கொமரலிங்கம், 10 ஆயிரத்துக்கும், மேற்பட்ட மக்கள் வசிக்கும் பேரூராட்சி பகுதியாகும். இதைச்சுற்றி, 30க்கும் மேற்பட்ட சிறு கிராமங்கள் உள்ளன. உடுமலை - பழநி, வழித்தடத்தில் உள்ள இந்த ஊர் பல ஆயிரம் மக்களின் இணைப்பு புள்ளியாக உள்ளது. இதனால், இங்கு பல பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இங்குள்ள பஸ் ஸ்டாப் எப்போதும் மக்களால் நிரம்பி வழிகிறது. ஆனால், இங்கு பஸ் ஸ்டாண்ட் இல்லாமல், ரோடு ஓரம் நின்று பயணிகளை ஏற்றிச்செல்லும் நிறுத்தம் தான் உள்ளது.இந்த குறுகிய இடத்தையும் ஆக்கிரமித்து, தள்ளுவண்டியில் பழகடைகள், பலகார கடைகள், பூக்கடைகள், என வைத்துள்ளனர். ரோட்டில் கடைகள் உள்ளதால், பஸ்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகிறது. இதனால், அடிக்கடி வாகன நெரிசல், விபத்துக்கள் ஏற்படுகிறது. பல ஆண்டாக மக்கள் கோரிக்கை விடுத்தும் பஸ் ஸ்டாண்ட் அமைக்க வில்லை. எனவே இங்கு ஆக்கிரமிப்புகளை அகற்றி, பஸ் ஸ்டாண்ட்அமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X