பொது செய்தி

தமிழ்நாடு

நகராட்சியில் டெங்கு கண்காட்சி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

Added : நவ 30, 2019
Advertisement
 நகராட்சியில் டெங்கு கண்காட்சி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில், பள்ளி மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்து விளக்கப்பட்டது.பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில், பள்ளி மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. நகர் நல அலுவலர் மாணிக்கவேல் ராஜன் தலைமை வகித்தார். சுகாதார ஆய்வாளர்கள் மாரியப்பன், ஜெயபார்வதி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்கள் கட்டுப்படுத்தும் விதம் குறித்து மாணவர்களிடம் விளக்கப்பட்டது.மாணவர்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது. டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் எவ்வாறு உருவாகுகிறது என்பதை விளக்கும் வகையில் கண்காட்சி நடத்தப்பட்டது.கண்காட்சியில், டிரம்கள், ஆட்டுக்கல், சிமென்ட் தொட்டி, தேங்காய் சிரட்டை ஆகியவற்றில், தேங்கும் நீரில் கொசு உற்பத்தியாகிறது என விளக்கப்பட்டது.கண்காட்சியில், கொசுப்புழு உருவாகும் காரணிகளை மாணவர்கள் பார்வையிட்டு, சந்தேகங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். நிகழ்ச்சியில், ஜோதிநகர் சாந்தி பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.தொடர்ந்து, ஜோதிநகர் நட்சத்திரா பூங்காவில், மக்கும், மக்காத குப்பை என தரம் பிரிக்கும் முறை மற்றும் உரம் தயாரிக்கும் முறை குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X