பொது செய்தி

தமிழ்நாடு

பழைய சொத்து வரியே செலுத்தலாம்: நகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

Added : நவ 30, 2019
Advertisement

பொள்ளாச்சி:'பொள்ளாச்சி நகராட்சியில், கடந்தாண்டு செலுத்திய பழைய சொத்து வரியே செலுத்தலாம்,' என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.பொள்ளாச்சி நகராட்சியில் கடந்தாண்டு ஏப்., 1ம் தேதி சொத்துவரி சீராய்வு செய்து, வரி உயர்வு செய்யப்பட்டது. தற்போது, கடந்தாண்டு ஏப்., 1ம் தேதிக்கு முன் செலுத்திய பழைய சொத்து வரியினை செலுத்திட அரசு உத்தரவிட்டுள்ளது.எனவே, பொள்ளாச்சி நகராட்சி எல்லைக்கு உட்பட்டுள்ள வரிவிதிப்பாளர்கள், 2018 ஏப்., 1ம் தேதி செலுத்திய பழைய சொத்துவரியை, வசூல் மையத்தில் நேரிடையாக செலுத்தலாம். ஏற்கனவே கூடுதலாக செலுத்திய சொத்துவரி, அவர்களின் சொத்துவரி கணக்கில் அடுத்த அரையாண்டுகளில் ஈடு செய்யப்படும்.சொத்து வரியில், பழைய வரியினையும், தொழில் வரி, காலியிட வரி, குடிநீர் கட்டணம், குத்தகை இன நிலுவைகளையும் (2019 - 20 ஆண்டுக்கு), டிச., 15ம் தேதிக்குள் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும்.பொதுமக்கள் வசதிக்காக வசூல் மையத்தில் அலுவலக விடுமுறை நாட்களான சனிக்கிழமை, காலை, 10:00 முதல் மாலை, 4:00 மணி வரை வரி செலுத்தலாம்.இவ்வாறு, நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X