பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகராட்சியில், மூன்று இடங்களில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாமில், 1,267 பேருக்கு முதியோர் உதவித்தொகைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.பொள்ளாச்சி நகராட்சியில், குமரன் நகர், எஸ்.வி.வி., நாயுடு வீதி, பத்ரகாளியம்மன் கோவில் அருகே என மூன்று இடங்களில், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.வருவாய் கோட்டாட்சியர் ரவிக்குமார் தலைமை வகித்தார். தாசில்தார் தணிகைவேல் வரவேற்றார். கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தார். துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். மொத்தம், 1,267 பேருக்கு முதியோர் உதவித்தொகைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.