பொது செய்தி

தமிழ்நாடு

கிராமங்களை இணைக்கும் மேம்பாலம்! ரூ. 1.97 கோடியில் பணிகள் தீவிரம்

Added : நவ 30, 2019
Advertisement
 கிராமங்களை இணைக்கும் மேம்பாலம்! ரூ. 1.97 கோடியில் பணிகள் தீவிரம்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, தமிழக - கேரளா எல்லையை இணைக்கும் வகையில், மேம்பாலம் கட்டும் பணிகள் தீவிரமாக நடக்கின்றன.பொள்ளாச்சி அருகே திம்மங்குத்து, தப்பட்டைக்கிழவன்புதுார் மற்றும் சுற்றுப்பகுதிகளில் இருந்து, காய்கறிகள், கேரளாவுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக, தப்பட்டை கிழவன்புதுார், நெடும்பாறை வழித்தடத்தை மக்கள் பயன்படுத்துகின்றனர்.இந்த வழித்தடத்தில் எல்லப்பள்ளம் என்னும் ஓடை குறுக்கிடுகிறது. ஓடையில் தண்ணீர் தேங்கி நிற்பதுடன், மழைக்காலங்களில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.இதனால், விளை பொருட்களை வாகனங்களில் எடுத்துக்கொண்டு, திம்மங்குத்து, தப்பட்டை கிழவன்புதுார், மண்ணுார் பிரிவு, கோபாலபுரம் வழியாக சென்று வருகின்றனர்.பத்து கி.மீ.,க்கு அதிகமாக சுற்றிச் செல்ல வேண்டியுள்ளதால், விவசாயிகள், வியாபாரிகள் சிரமப்படுகின்றனர். இதனால், எல்லப்பள்ளம் ரோட்டில் மேம்பாலம் கட்ட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர். நபார்டு மற்றும் கிராமப்புறச்சாலைகள் திட்டத்தின் கீழ், மேம்பாலம் கட்ட கடந்தாண்டு அரசு நிதி ஒதுக்கீடு செய்தது.தமிழக - கேரளா எல்லையான நெடும்பாறை எல்லப்பள்ளத்தில், 1.97 கோடி ரூபாய் செலவில் மேம்பாலம் கட்டப்படுகிறது.பாலம், ஏழு மீட்டர் உயரம், 10 மீட்டர் அகலம், 30 மீட்டர் நீளத்தில் அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகள் தீவிரமாக நடக்கிறது.அதிகாரிகள் கூறுகையில், 'மேம்பாலம் அமைக்கும் பணிகள், 90 சதவீதம் நிறைவடைந்துள்ளன. கப்பி சாலை அமைத்து, தார் சாலை அமைக்கும் பணிகள் நடக்கிறது. பணிகள் நிறைவடைந்ததும், விரைவில் பயன்பாட்டுக்கு விடப்படும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X