பொது செய்தி

தமிழ்நாடு

விநாயகர் கோவிலில் இன்று கும்பாபிேஷகம்

Added : நவ 30, 2019
Advertisement

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு அடுத்துள்ள மணிகண்டபுரத்தில் விநாயகர், பேச்சியம்மன், கருப்பராயர், கன்னிமார் கோவிலில், இன்று, 1ம் தேதி கும்பாபிேஷகம் நடக்கிறது.நேற்று காலை 8:00 மணிக்கு மஹா கணபதி ஹோமம், மஹாலட்சுமி மூலமந்தர ஜெப ஹோமம், கோ பூஜை, சுமங்கலி பூஜை நடந்தது. மதியம், 2:00 மணிக்கு முளைப்பாரி எடுத்து ஆற்றில் இருந்து அழைத்து வரும் நிகழ்ச்சியும், மாலை 4:30 மணிக்கு முதல் கால யாக பூஜை, மஹா தீபாராதனை நடந்தது. மாலை, 6:00 மணிக்கு விமான கலசம் நிறுவுதல், யந்தர பிரதிஷ்டை, சுவாமிகளுக்கு அஷ்டபந்தன மருத்து சாத்துதல் நிகழ்ச்சி நடந்தது.இன்று, 1ம் தேதி அதிகாலை, 4:30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, மஹா தீபாராதனை கலசம் புறப்பாடு நடக்கிறது. காலை, 6:30 மணிக்கு, விநாயகர், பேச்சியம்மன், கருப்பராயர், கன்னிமார் சுவாமிகளுக்கும், விமான கலசத்துக்கும் சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் செய்து வைக்கின்றனர். அபிேஷகம், அலங்காரம், வேத சாற்று முறை, தசதானம், தச தரிசனம் நடக்கிறது. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X