வளாகத்துக்கு பூட்டு: சுகாதாரத்துக்கு வேட்டு| Dinamalar

வளாகத்துக்கு பூட்டு: சுகாதாரத்துக்கு வேட்டு

Added : நவ 30, 2019

கிணத்துக்கடவு:கோவிந்தாபுரத்தில் புதுப்பிக்கப்பட்ட மகளிர் சுகாதார வளாகம் பூட்டியே வைக்கப்பட்டுள்ளது.கோவிந்தாபுரம் புதுக்காலனியில், மகளிர் சுகாதார வளாகம் கடந்த, 2017 - 18ம் ஆண்டு, 1.28 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.ஆனால், இந்த சுகாதார வளாகம் கடந்த ஒரு ஆண்டாக திறக்கப்படாமல் பூட்டியே வைக்கப்பட்டுள்ளது. வளாகத்திற்கு தண்ணீர் வசதியும் செய்யப்பட்டுள்ளது. ஆனால், மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கவில்லை.இதனால், இப்பகுதியில் வசிக்கும் மக்கள் வீட்டில் உள்ள தனிநபர் இல்ல கழிப்பிடங்களை பயன்படுத்தி வருகின்றனர். கழிப்பிடம் கட்டாத மக்கள் திறந்தவெளியே பயன்படுத்தி வருகின்றனர். இதனால், கிராமத்தில் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வு காண, புதுப்பிக்கப்பட்ட மகளிர் சுகாதார வளாகத்தை, திறக்க வேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X