பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ் ஸ்டேஷன் மாறியாச்சு: வழக்கு வாகனம் இடம் மாறல

Added : நவ 30, 2019
Advertisement

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, வடக்கிபாளையம் போலீஸ் ஸ்டேஷன் இடமாறிய பிறகும், வழக்குகளில் பறிமுதலான வாகனங்கள் அகற்றப்படாமல், நடுப்புணி ரோட்டோரம் ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ளன.பொள்ளாச்சி - நடுப்புணி ரோட்டில், செயல்பட்ட வடக்கிபாளையம் போலீஸ் ஸ்டேஷன், கடந்தாண்டு சூலக்கல் ரோட்டில் சொந்த கட்டடத்துக்கு இடம் மாறியது.பழைய கட்டடம் பராமரிப்பு இல்லாததால், தற்போது புதர் மண்டி காட்சி அளிக்கிறது. அக்கட்டடம் எதிரே, ரோட்டோர காலி இடத்தில், வழக்கு தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்ட லாரி, டெம்போ, வேன், கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டன. வழக்கு விசாரணை முடிவுக்கு வந்தும், பல வாகனங்கள் ஒப்படைக்கப்படவில்லை. மேலும், வாகன உரிமையாளர்களும், பழைய வாகனங்களை கண்டு கொள்வதில்லை.தற்போது, நடுப்புணி ரோட்டில் ஸ்டேஷனும் இல்லாத நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மட்டும் நிறுத்தப்பட்டுள்ளது. மழைக்கு முளைத்த புதர் செடிகள், கொடிகளால், வாகனங்கள் ஒட்டு மொத்தமாக மறைக்கப்பட்டுள்ளது.சமீப நாட்களாக, இப்புதரில், பாம்புகள் இருப்பதை கால்நடை மேய்ப்பவர்களும், ஸ்டேஷன் அருகே உள்ள குடியிருப்புகளை சேர்ந்தவர்களும் கண்டுள்ளனர்.இதனால், குடியிருப்பு பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். வடக்கிபாளையம் போலீசார், நடவடிக்கை எடுத்து ரோட்டோரத்தில் நிறுத்தப்பட்டுள்ள பறிமுதல் வாகனங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X