பொது செய்தி

தமிழ்நாடு

நீரா விற்பனையில் பெரும் இழப்பு: தொடர் மழையால் தேக்க நிலை

Added : நவ 30, 2019
Share
Advertisement
பொள்ளாச்சி:தொடரும் பருவமழையால், பொள்ளாச்சி, கோவை பகுதியில் நீரா பானம் விற்பனை பெரும் சரிவை கண்டுள்ளது.தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் விதமாக, நீரா பானம் உற்பத்தி செய்ய, நிபந்தனைகளுடன் அரசு அனுமதி அளித்தது.பல தோப்புகளில் நீரா பானம் உற்பத்தி செய்தாலும், ஒட்டுமொத்தமாக விற்பனைக்கு அனுமதி அளிப்பதில்லை.மாவட்ட அளவில், பொள்ளாச்சியில் விநாயகா தென்னை

பொள்ளாச்சி:தொடரும் பருவமழையால், பொள்ளாச்சி, கோவை பகுதியில் நீரா பானம் விற்பனை பெரும் சரிவை கண்டுள்ளது.தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் விதமாக, நீரா பானம் உற்பத்தி செய்ய, நிபந்தனைகளுடன் அரசு அனுமதி அளித்தது.பல தோப்புகளில் நீரா பானம் உற்பத்தி செய்தாலும், ஒட்டுமொத்தமாக விற்பனைக்கு அனுமதி அளிப்பதில்லை.
மாவட்ட அளவில், பொள்ளாச்சியில் விநாயகா தென்னை உற்பத்தியாளர் நிறுவனம், கோவை தென்னை உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் ஆனைமலை தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு மட்டுமே நீரா விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இம்மூன்று நிறுவனங்கள் சார்பில், பொள்ளாச்சி, கோவை, ஆனைமலை பகுதிகளில், 11 மையங்களில் நீரா பானம் விற்பனை செய்யப்படுகிறது.இதில், கிடைக்கும் வருவாய், தென்னை விவசாயிகளுக்கு மட்டுமன்றி, உற்பத்தியாளர் நிறுவனங்களின் வருவாயையும் பெருக்கியுள்ளது.இச்சூழலில், கடந்த சில மாதங்களாக, தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் தட்ப வெப்ப நிலையை அடியோடு மாற்றியுள்ளது.இதனால், நீரா உற்பத்தி மட்டுமல்ல; நீரா விற்பனையையும் வெகுவாக குறைந்துள்ளது.
ஒவ்வொரு நாளும், நீரா பானம் விற்பனையாகாமல், உற்பத்தியாளர்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி வருகிறது.விற்பனையாகாமல் தேங்கும் நீராவை, பதப்படுத்தி சேமிக்க, உரிய உபகரணங்கள், தொழில்நுட்பம் இல்லாததால், தினமும் பல நுாறு லிட்டர் நீரா வீணாகிறது.இதனால், ஒவ்வொரு விற்பனை மையத்திலும், தினமும், 5 - 10 ஆயிரம் ரூபாய் வரை இழப்பு ஏற்படுவதாக தென்னை உற்பத்தியாளர் நிறுவனத்தினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X