பொது செய்தி

தமிழ்நாடு

மீன், இறைச்சி விற்பனை மந்தம்

Added : நவ 30, 2019
Advertisement

ஆனைமலை:ஆனைமலை சுற்றுப்பகுதிகளில், சபரிமலை சீசன் காரணமாக, அணை மற்றும் கடல் மீன் விற்பனை மந்தமாக உள்ளது.ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் விரதம் இருந்து, சபரிமலை ஐயப்ப சுவாமி கோவிலுக்கு பக்தர்கள் மாலை போடுவார்கள். கார்த்திகை முதல் தைப்பூசம் வரையில், வீடுகளில் மீன், கோழி, ஆடு உள்ளிட்ட இறைச்சிகள் உண்பது குறையும். இதனால், இறைச்சி கடைகளில் விற்பனை மந்தமாக இருக்கும்.பொள்ளாச்சி, ஆனைமலை சுற்றுப்பகுதிகளுக்கு, கேரள மாநிலம் பாலக்காடு, புதுநகரம்; கடலுார், ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கடல் மீன்களின் வரத்து உள்ளது.அதேபோல், ஆழியாறு, திருமூர்த்தி அணைகளின் மீன்கள் விற்பனை செய்யப்படுகிறது. போதிய அளவு வரத்து இருந்தும் அணை மற்றும் கடல் மீன்களின் விற்பனை நாளுக்குநாள் குறைந்து வருகிறது. விலையும் சரிந்து வருகிறது.மீன் விற்பனையாளர்கள் கூறுகையில், ''சபரிமலை சீசன் காரணமாக, மீன் விற்பனை குறைந்து வருகிறது. சீசன் துவங்குவதற்கு முன் வஞ்சரம் மீன் ஒரு கிலோ, 750 ரூபாய்க்கு விற்பனையானது. தற்போது, 600 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஊழி மீன், 250 ரூபாயில் இருந்து, 200 ரூபாயாக குறைந்துள்ளது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X