சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆழியாறு அணையில் நீர் கசிவு? வலைதள வதந்தியால் பரபரப்பு

Added : நவ 30, 2019
Advertisement

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே ஆழியாறு அணையில், கசிவு ஏற்பட்டுள்ளதால், அணைக்கு அபாயம் உள்ளதாக, சமூக வலைதளங்களில் வதந்தி பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.பொள்ளாச்சி அருகே ஆழியாறு அணை மொத்தம், 120 அடி உயரம் கொண்டது. அணையில் நீர் தேக்கப்பட்டு, பழைய, புதிய ஆயக்கட்டு பாசனம், குடிநீர் மற்றும் ஒப்பந்தப்படி கேரளாவுக்கும் நீர் வினியோகிக்கப்படுகிறது. அணைக்கு நீர் வரத்து உள்ளதால், அணை நீர்மட்டம், 119 அடியாக உள்ளது. அணை நிரம்ப இன்னும், ஒரு அடி மட்டுமே நீர்மட்டம் உயர வேண்டியுள்ளதால், பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில், நேற்று சமூக வலைதளங்களில், 'ஆழியாறு அணை புகைப்படத்துடன், அணையில் நீர் கசிவு ஏற்பட்டுள்ளது. அணை உடையும் அபாயம் உள்ளதாக,' தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.தகவல் அறிந்த பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள் அறிவுறுத்தலின்படி, அதிகாரிகள் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர்.பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'ஆழியாறு அணையில் கசிவு ஏற்பட்டு உடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியுள்ளது.அதிகாரிகள் குழு ஆய்வு செய்ததில், அணையில், ஒன்றரை மாதங்களாக, 119 அடியாக உள்ளது. அழுத்தம் காரணமாக நீர் வெளியேறுவது இயல்பான கசிவு தான். இதனால் எவ்வித பாதிப்பும் இல்லை.அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், குழுவினர் தினமும் கண்காணிப்பு பணிகள் மேற்கொண்டுள்ளனர். சமூக வலைதளங்களில், மக்களிடம் பீதியை ஏற்படுத்தும் வகையில், வதந்திகளை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X