பொது செய்தி

தமிழ்நாடு

'இசையை வசமாக்கியது எப்படி?' சிலாகி்க்கிறார் சீர்காழி சிவ சிதம்பரம்

Added : நவ 30, 2019
Advertisement

திருப்பூர், காலேஜ் ரோடு, ஐயப்பன் கோவிலில் நடந்த, வைர விழா மண்டல பூஜை இசை நிகழ்ச்சிக்கு வந்திருந்த அவரை சந்தித்தோம். அவர் பேசியதே, சங்கீதம் போல்தான் இருந்தது.தனது இசைப்பயணம் குறித்து அவரிடம் பேசியதிலிருந்து...இளைய தலைமுறையினரிடம் இறை நம்பிக்கை எப்படி உள்ளது?நிச்சயமாக உண்டு. ஒவ்வொரு தலைமுறையிலும் இறை வழிபாட்டின் சதவீதம் குறையாமல் காணப்படுகிறது.
உதாரணமாக சொன்னால், சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை, ஆண்டுதோறும், அதிகரித்து கொண்டுதானே இருக்கிறது!கோவில் வழிபாட்டு முறைகளில் மாறுதலை காணமுடிகிறதா?நமது பாரதம், 'தாயை வணங்கும் பூமி'. இந்த தத்துவத்தை சொன்னவர் சுவாமி ஐயப்பன். தத்துவத்தை பாடலாக்கி பாடும்போது, மக்கள் ஆர்ப்பரித்து ஏற்று கொள்கின்றனர். அனைவரிடமும், தத்துவத்துடன் கூடிய ஆழ்ந்த பக்தியை காண முடிகிறது.மருத்துவர் - இசை; இரண்டையும் எப்படி கையாள்கிறீர்கள்?இவ்விரண்டும் எனது இரு கண்கள். அதனால், காலையில் மருத்துவர். மாலையில் இசை கலைஞன். இரண்டோடும், ஒன்றாக கலந்து பயணிக்கிறேன்.இசைக்காக நீங்கள் என்ன செய்கிறீர்கள்?தமிழ் இலக்கியங்களை, பாடலாக பதிவு செய்து, மக்களுக்கு எடுத்துச் செல்லும் பணியை செய்து வருகிறேன். காரணம், இசைப் பணிக்கு என்றும் ஓய்வு கிடையாது.அப்பா சீர்காழி கோவிந்தராஜன் குறித்து...என்னை, வழக்கறிஞராகவோ, டாக்டராகவோ, காணவே அவர் ஆசைப்பட்டார். காரணம், இசைத்துறையில், போராடி வளர வேண்டிய நிர்ப்பந்தம் இருப்பதாக சொன்னார். ஆனால், அவரின் புகழ், மாலை மரியாதை, கை தட்டல்களை கண்டபோது, நானும் இசையில் நாட்டம் செலுத்தினேன்.மேடையில் பாடுவதை அறிந்த அவர், 'என்னை இன்ஸ்பிரேஷனாக எடுத்துக் கொள். எனக்கு இமிட்டேஷனராக ஆகி விடாதே' என்றார். அதனாலேயே எனக்கென ஒரு பாணியை உருவாக்கினேன்.அந்தக் காலம் - இந்தக் காலம்; பக்தி பாடல்கள் தனித்துவத்தை ஒப்பிட்டால்...அன்று இருந்தது ஆன்மிக உலகம். மனசாட்சியோடு தொழில் நடத்தினர். இன்று, வணிக உலகம். ஆன்மிக பாடல்களை, கொச்சைப்படுத்தி வருகின்றனர். கொள்கை பிடிப்பு இல்லாமல் வெற்றியை மட்டுமே நோக்கும் மனோபாவம் கொண்டவர்கள் இத்தகைய செயலில் ஈடுபடுகின்றனர். பாவ புண்ணியங்களை அவரவர்களே அனுபவிப்பர்.கடல்தாண்டிய இசைப்பயணம் பற்றி...தற்போது, லண்டன் மற்றும் மலேசியாவில் இசைநிகழ்ச்சி நடத்தி முடிக்கப்பட்டது. லண்டனில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியின் வாயிலாக நிதி திரட்டப்பட்டு, அங்குள்ள தமிழ் சங்கத்துக்கு வழங்கப்பட்டது.சினிமாவில் பாட வாய்ப்பு கிடைக்கிறதா?திரையிசையில் நாட்டம் கிடையாது. ஆனால், நல்ல பாடல்களை பாடும் வாய்ப்பு கிடைத்தால் அதனை மறுப்பதும் கிடையாது.நம்மிடம் பேசி விட்டு, கச்சேரியை தொடர்ந்தார். 'நீயல்லால் தெய்வமில்லை... எனது நெஞ்சே நீ வாழும் எல்லை... முருகா...!' என்று உச்சஸ்தாயியில் அவர் பாட துவங்கினார்.சீர்காழி கோவிந்தராஜன் பாடுவது போலவே, செவிகளில் ரீங்காரமிட்டது. அவரது குரலை ஆசீர்வதிப்பதுபோல், வானம் மழையை பிரசவிக்க துவங்கியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X