பொது செய்தி

தமிழ்நாடு

'படுத்து விட்ட' பாய் விற்பனை

Added : நவ 30, 2019
Advertisement

கோரைப்பாய் உற்பத்திக்கு பெயர் போன, சேலம் ஓமலுாரை சேர்ந்த பலருக்கும், பாய் விற்பனை தான் பரம்பரை தொழில். கிட்டத்தட்ட, 20 ஆண்டாக, அவிநாசியை மையமாக வைத்து, பாய் விற்பனையில் ஈடுபட்டு வரும், சேலம் ஓமலுாரை சேர்ந்தவர் கோவிந்தராஜ், 45; சேலத்தில் இருந்து மொத்தமாக கோரைப்பாயை வாங்கி வந்து, ஊரெங்கும் அவற்றை விற்க, 15 பேரை பணியமர்த்தியிருக்கிறார்.''முன்பெல்லாம், தினசரி, 40 - 50 பாய் கூட வித்துடுவோம்; இன்னைக்கு, 5, 10 பாய் விக்கிறதே சிரமமா இருக்கு. பிளாஸ்டிக் பாய் வந்தபிறகு, கோரைப்பாய்க்கு வரவேற்பு குறைஞ்சுப்போச்சு. மெத்தை, சோபா என, சந்தைக்கு வந்துவிட்ட சொகுசு பொருட்கள், கோரைப்பாய்க்கு மவுசு இழக்க செய்துவிட்டது,'' என, நவீன மாற்றத்தால் சூறையாடப்பட்ட கோரைப்பாய் வர்த்தகத்தின் நிலைமையை ஆதங்கத்துடன் சொல்கிறார், கோவிந்தராஜ்.''10, 15 வருஷம் முன்பு, எங்கள தேடி வந்து பாய் வாங்கிட்டு போவாங்க; இப்ப வீடு தேடி போனாலும் யாரும் வாங்கறது இல்ல. முன்பெல்லாம், சைக்கிளில் போய், பாய் விற்கும் போது, 20 ரூபாய் கூடுதலா கொடுப்பாங்க. இப்ப, மொபெட்ல போய் பாய் விக்கிறோம். அசலை விட, 50 ரூபாய் குறைச்சலா கேக்கிறாங்க. நாங்க, காசு, பணம் நிறைய சம்பாதிச்சுட்டோம்னு தப்பு கணக்கு போட்டுட்டாங்க,'' என வியாபாரி சுரேஷ் சொல்லும் போது, நுகர்வு கலாசாரத்தின் மாயதோற்றத்தை உணர்ந்து கொள்ள முடிந்தது.வியாபாரி மணி என்ன சொல்கிறார் தெரியுமா?'கலர்பாய், நார்பாய், நுால் தலைகட்டுப்பாய் என, மூணு வகை பாய் விக்கிறோம்; விலை தான் வித்தியாசம். குணம் ஒன்ணு தான். கோரைப்பாயில் படுத்தால், உடல் சூடு தணிந்து, குளிர்ச்சி ஏற்படும்.பல ஆயிரம் ரூபாய் மெத்தைல படுக்கறதை விட, 300 ரூவா பாய்ல துாங்குற சுகமே தனின்னு, விஷயம் புரிஞ்சவங்களுக்கு தெரியும். எல்லா பொருட்களையும், விளம்பரம் மூலமா மக்கள்கிட்ட கொண்டு போய் சேக்றாங்க. ஆனா, கோரைக்கும், பாய்க்கும் விளம்பரம் கிடையாது.கோரைப்பாய் விற்பனை என்பது, எங்க மண் சார்ந்த தொழில்; அதனால தான் அந்த தொழிலை செய்றோம்; வியாபாரம் 'டல்'லடிக்குது; எத்தனை வருஷம் தாக்குப்பிடிக்கும்னு தெரியல. அதுக்கு ஏத்த மாதிரி, கோரைப்புல் உற்பத்தி குறைச்சலா இருக்கறதால விலை அதிகமா இருக்கு...'யதார்த்தத்தை பேசுகிறார் மணி.இத்தனை ஆண்டுகாலம் தொழில் செய்யும் இந்த வியாபாரிகளுக்கு, நிரந்தர தங்குமிடம் இல்லை. ரோட்டோரம், வெட்ட வெளியில் வானமே கூரையாக, படுத்துறங்கி, வியாபாரத்தை கவனித்துக் கொண்டிருக்கின்றனர், என்பது தான் ஆதங்கத்தின் உச்சம். 'படுத்து'விட்ட பாய் வர்த்தகம் மீண்டெழுமா!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X