பொது செய்தி

தமிழ்நாடு

'ஆவின் பால் குறித்து அச்சம் தேவையில்லை' நிர்வாகம் விளக்கம்

Added : நவ 30, 2019
Advertisement


சென்னை:'நுகர்வோருக்கு பாதுகாப்பான பால் வழங்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, ஆவின் பால் குறித்து, எவ்வித அச்சமும் வேண்டாம்' என, ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் சார்பில், தினமும் சராசரியாக, 33.23 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. அதில், 25.50 லட்சம் லிட்டர் பால், நுகர்வோருக்கு வினியோகிக்கப்படுகிறது. மீதமுள்ள பால், மொத்த விற்பனையாகவும், பால் உப பொருட்களாகவும், விற்பனை செய்யப்படுகிறது.அறிக்கைஉணவு பாதுகாப்பு துறை மற்றும் தர நிர்ணய சட்டத்துறை சார்பில், இந்தியா முழுவதும், 6,432 பால் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. அவற்றின் தரம் ஆய்வு செய்யப்பட்டு, அறிக்கை வெளியிடப்பட்டது. தமிழகம், டில்லி, கேரளா போன்ற மாநிலங்களில் பயன்படுத்தப்படும் பாலில், 'அப்லாடாக்ஸின் - எம் 1' என்ற நச்சுப்பொருள், 0.5 மில்லி கிராமை விட, அதிக அளவில் உள்ளதாக, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.'அப்லாடாக்ஸின்' என்பது, கால்நடை தீவனங்களில் வளர்கிற, 'அஸ்பெர்சில்லஸ்பிளாவஸ்' என்ற, பூஞ்சான்களால் உருவாகும், நச்சுப் பொருளாகும். 'அப்லாடாக்ஸின்' என்பது, திட்டமிட்டு சேர்க்கப்படும் கலப்படப் பொருள் அல்ல. இது, இயற்கையாகவே, தரமற்ற மற்றும் சரியாக பராமரிக்கப்படாத, கால்நடை தீவனம் வழியே, கால்நடைகளில் வளர்சிதை மாற்றத்தால் உருவாகிறது.பரிசோதனைஇதன் அடிப்படையில், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் மற்றும் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் சார்பில், பால் சேகரிக்கப்பட்டு, உணவு பாதுகாப்பு துறையால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வுக்கூடங்களில், 'அப்லாடாக்ஸின் - எம் 1' என்ற நச்சுப்பொருள், எவ்வளவு உள்ளது என்று பரிசோதிக்கப்பட்டது.
பதினேழு மாவட்ட ஒன்றியங்கள், ஐந்து இணையம் வழியே பரிசோதனை செய்யப்பட்டதில், உணவு பாதுகாப்புத் துறை அங்கீகரித்துள்ள, பாதுகாப்பான அளவான, 5 மில்லி கிராமுக்கும் குறைவாகவே உள்ளது.எனவே, ஆவின் பால், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தின் தர நிலைமைக்கு உட்பட்டுள்ளது. நுகர்வோருக்கு பாதுகாப்பான பால் வழங்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, ஆவின் பால் குறித்து, எவ்வித அச்சமும் அடைய வேண்டாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X