பொது செய்தி

தமிழ்நாடு

சிறு வணிகருக்கான ஓய்வூதிய திட்டம் நிலோபர் கபீல் வேண்டுகோள்

Added : நவ 30, 2019
Advertisement
 சிறு வணிகருக்கான ஓய்வூதிய திட்டம் நிலோபர் கபீல் வேண்டுகோள்

சென்னை:'சிறு வணிகர்கள் மற்றும் சில்லரை வியாபாரிகளுக்கான ஓய்வூதிய திட்டத்தில், உறுப்பினர்களை சேர்ப்பதற்காக, வரும், 6ம் தேதி வரை, மாநில அளவில் ஓய்வூதிய வாரம் கடைபிடிக்கப்பட உள்ளது.''இதை, அமைப்புசாரா தொழிலாளர்கள் பயன்படுத்த வேண்டும்,'' என, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் தெரிவித்தார்.

பிரதமரின் தொழிலாளர் ஓய்வூதிய திட்டத்தில், அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் சிறு வணிகர்களுக்கு, ஓய்வூதிய அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி, நேற்று சென்னையில் நடந்தது. சேைவ மையம்நிகழ்ச்சியில், அமைச்சர் நிலோபர் கபீல் கூறியதாவது: இத்திட்டத்தில் பயன் பெற, 18 வயது முதல், 40 வயது வரை உள்ளவர்கள் தகுதி பெறுவர்.இதில் சேரும் உறுப்பினர்களின் வயதிற்கேற்ப, மாதந்தோறும், 55 ரூபாய் முதல், 200 ரூபாய் வரை, பிரிமீயம் செலுத்த வேண்டும்.அதற்கு இணையான தொகையை, ஒவ்வொரு உறுப்பினருக்கும், மத்திய அரசு செலுத்தும். உறுப்பினர்களின் மாத வருமானம், 15 ஆயிரம் ரூபாய் அல்லது அதற்கு கீழே இருக்க வேண்டும். வருமான வரி செலுத்துவோர், இந்த திட்டத்தில் சேர முடியாது.இத்திட்டத்தில் சேர, அமைப்புசாரா தொழிலாளர்கள், அருகில் உள்ள, பொது சேவை மையம் சென்று, பதிய வேண்டும். கணினியில் பதிவேற்றம் செய்த பின், ஓய்வூதிய கணக்கு எண் உருவாக்கப்பட்டு, அதன் நகல், சம்பந்தப்பட்ட உறுப்பினர்களுக்கு வழங்கப்படும். அதன்பின், அடையாள அட்டையும், பதிவேற்றம் செய்யப்பட்ட, விண்ணப்பத்தின் நகலும், உறுப்பினர்களுக்கு வழங்கப்படும். இதுநாள் வரை, 53 ஆயிரத்து, 549 தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். ரூ.1.50 கோடிஇதேபோல், சிறு வணிகர்கள் மற்றும் சில்லரை வியாபாரிகளுக்கான, ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இந்த திட்டத்தில், ஆண்டுக்கு, 1.50 கோடி ரூபாய்க்கு மிகாமல், வணிகம் செய்யும் சிறு வணிகர்கள் பதிவு செய்யலாம். அதில், அதிக உறுப்பினர்களை சேர்க்க, வரும், 6ம் தேதி வரை, மாநில அளவில், ஓய்வூதிய வாரமாக கடைபிடிக்கப்பட உள்ளது. இந்த வாய்ப்பை, அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களும், பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார். நிகழ்ச்சியில், தொழிலாளர் துறை செயலர் நசீமுதீன், ஆணையர் நந்தகோபால் பங்கேற்றனர். பிரதமரின் தொழிலாளர் ஓய்வூதிய திட்டத்தில், அமைப்பு சாரா தொழிலாளர்கள் மற்றும் சிறு வணிகர்களுக்கு, ஓய்வூதிய அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி, நேற்று சென்னையில் நடந்தது. அமைச்சர் நிலோபர் கபீல், அடையாள அட்டைகளை வழங்கினார். அருகில், தொழிலாளர் துறை செயலர் நசீமுதீன், ஆணையர் நந்தகோபால், சென்னை மாவட்ட கலெக்டர் சீதாலட்சுமி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X