பொது செய்தி

தமிழ்நாடு

தாளம் தப்பாத குட்டீஸ் கலக்கல்

Added : நவ 30, 2019
Advertisement

கலெக்டர் உட்பட அனைத்து அதிகாரிகளும், பெரிய பூங்கொத்துடன், மெயின் கேட்டை பார்த்தபடியே காத்திருக்காங்க... பல்லடம் ரோட்ல வந்த கார்கள் வேகமாக கலெக்டர் ஆபீசுக்குள் வந்ததும், பூங்கொத்து சகிதமாக வந்து, கால்நடைத்துறை முதன்மை செயலர் கோபாலை, பவ்யமா வரவேற்கிறாங்க.கையில, பூங்கொத்த வாங்கினவரு, அருகில் நின்றவங்களைக் கூட பார்க்காம, திடீர்னு சத்தம் வந்த திசையை திரும்பி பார்க்கிறார். காரணம், அரசு பள்ளி 'யூனிபார்ம்' போட்ட, ஆறு வயது குழந்தைங்க... பறையை எடுத்து, தப்படியில் கலகலத்துக்கொண்டிருந்தனர். ஆய்வுக்கூட்டத்துக்கு 'லேட்' ஆனாலும் பரவாயில்லைனு, அதிகாரிகள் குழந்தைகளை ஆர்வமாக பார்க்க, குழுவாக நகர்ந்தனர்.வெள்ளியங்காடு தாய்த்தமிழ்ப் பள்ளி குழந்தைகள், 22 பேர், தலா, 11 பேர் வரிசையாக நின்று, பறையடித்தபடி ஆடத்துவங்கினர். சிறுமியரும், சிறுவர்களும், காலில் செருப்பை கழற்றாமல், 'கணீர்' என்று ஒலிக்கும் சலங்கை அணிந்திருந்தனர்.இடது கையில் தப்பட்டை பலகையை கையில் ஏந்தி, வலது கையில் குச்சியை பிடித்து, தோள்களில் வலி பரவும் அளவுக்கு வாசிக்க துவங்கினர். வலதுகால், இடதுகாலை என, துாக்கி ஆடியபடி, எதிரெதிரே நின்ற அணியினர் தப்படித்து, ஆடியபடியே ஒரே கோடாக இணைந்து, பிறகு, வட்டமாக சென்று அபாரமாக ஆடினர். குழந்தைகளின் ஆட்டத்துக்கு, ஆசிரியர்கள் தயாரித்திருந்த டெங்கு ஒழிப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு பாடல்களை ஆசிரியர்கள் பாடி, அனைவரின் பாராட்டையும் பெற்றனர்.பள்ளியின் தாளாளர் தங்கராஜிடம் பேசினோம்...நானும், எனது மனைவியும், அரசு உதவியுடன், தாய் தமிழ்ப் பள்ளியை நடத்தி வருகிறோம். தமிழர்கள் கலையில் ஒன்றாக, தப்பாட்டத்தை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்துள்ளோம்.கோலாட்டம், ஒயிலாட்டம் போன்ற பாரம்பரிய ஆட்டத்திலும், எங்கள் மாணவர்கள் கெட்டிக்காரர்கள்.தன்னார்வலர் உதவியுடன், பறையடி பலகைகள் தயாரித்தோம்.கையில் ஏந்தி ஆட வசதியாக, சிறிய அளவில் செய்து, கலைஞர்களை அழைத்து பயிற்சி அளித்தோம். கல்வியில் சிறந்து விளங்கும், சிறுவர், சிறுமியர், தப்பாட்டத்தை தாளம் தப்பாமல் கற்றுக்கொண்டனர். அதிலும், அழகான உடல் அசைவுகளுடன், லேசாக ஆடியபடியே, தப்படிப்பதில் கைதேவர்ந்தவர்களாக உள்ளனர்.தாய் தமிழ்ப்பள்ளியில் பயிலும் ஏழை குழந்தைகளின் தப்பாட்டத்தால், கலெக்டர் அலுவலக வளாகமே களைகட்டிவிட்டதாக, அனைவரும் பாராட்டினர்... என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X