பொது செய்தி

தமிழ்நாடு

'செயல்படாத நிறுவனங்கள் புத்துயிர் பெறும் சூழல்'

Updated : டிச 02, 2019 | Added : நவ 30, 2019 | கருத்துகள் (3)
Advertisement
 செயல்படாத ,நிறுவனங்கள், முதலீட்டாளர்கள், புத்துயிர் பெறும், சூழல்

சென்னை:''முந்தைய காலங்களில், பல்வேறு காரணங்களால் செயல்படாமல் நின்ற தொழில் நிறுவனங்கள், தற்போது, தமிழக அரசின் தொடர் முயற்சிகளால், புத்துயிர் பெறும் சிறப்பான சூழல் உருவாகி உள்ளது,'' என, முதல்வர் இ.பி.எஸ்., தெரிவித்தார்.

சென்னை, கிண்டியில் உள்ள, சொகுசு ஓட்டலில், நேற்று மாலை, 'தொழில் வளர் தமிழ்நாடு, முதலீடுகள் மற்றும் திறன் மேம்பாட்டு அமர்வு' நிகழ்ச்சி நடந்தது.


புரிந்துணர்வு ஒப்பந்தம்

இதில், முதல்வர் இ.பி.எஸ்., முன்னிலையில், 5,027 கோடி ரூபாய் முதலீட்டில், 20 ஆயிரத்து, 351 பேருக்கு, வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், ஒன்பது தொழில் நிறுவனங்களுடன், புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இரண்டு புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள், 28.43 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்க, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ஏற்கனவே, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட, மூன்று அமெரிக்க நிறுவனங்களின் திட்டங்களையும், 60 கோடி ரூபாயில், மூன்று உயர்நிலை திறன் மேம்பாட்டு மையங்களையும், முதல்வர் துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின், புதிய அடையாள சின்னம் வெளியிடப்பட்டது. தொழில் நிறுவனங்களின் குறைகளை தீர்க்க உதவும், 'தொழில் நண்பன்' இணையதளம் துவக்கப்பட்டது.நிகழ்ச்சியில், முதல்வர் பேசியதாவது:ஜெயலலிதா, 2015ல், முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தினார். இந்த ஆண்டு ஜனவரியில், இரண்டாவது, உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட்டது.


திறன் பயிற்சி



இதில், 3 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல், முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. தமிழக அரசு, புரிந்துணர்வு ஒப்பந்தப்படி, திட்டங்களை நிறைவேற்ற, தேவையான உதவிகளை செய்து வருகிறது. தமிழக அரசு, புதிய முதலீடுகளை ஈர்க்க, தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

தமிழக தொழில் துறை மேம்பாட்டிற்கு, தமிழக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. மேலும், தொழில் துவங்கும் முதலீட்டாளர்களுக்கு, பயன்படும் வகையில், பல திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.தொழில் நிறுவனங்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கேற்ப, அரசின் நிதியுதவியுடன், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு நிறுவனம் வழியே, திறன் பயிற்சி வழங்கப்படும்.

இதற்கான பாடத்திட்டத்தையும், பயிற்சி நிறுவனத்தையும், சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனமே, தேர்வு செய்யலாம். பயிற்சி பெற்றவர்களிடமிருந்து, உகந்த நபர்களை, சம்பந்தப்பட்ட நிறுவனங்களே, தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.முந்தைய காலங்களில், பல்வேறு காரணங்களால் செயல்படாமல் நின்ற தொழில் நிறுவனங்கள், தற்போது, தமிழக அரசின் தொடர் முயற்சிகளால், புத்துயிர் பெறும் சிறப்பான சூழல் உருவாகி உள்ளது.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
01-டிச-201908:17:02 IST Report Abuse
ஆரூர் ரங் திராவிஷர்களும் அதிகாரிகளும் மாமூல் கேட்டு மிரட்டாமல் இருந்தாலே மூடவேண்டியிருந்திருக்காது
Rate this:
Share this comment
Cancel
RajanRajan - kerala,இந்தியா
01-டிச-201906:23:48 IST Report Abuse
RajanRajan அப்போ உள்ளூர் சாராயம் காய்ச்சும் பட்டறைகள் அவுட்டா முருவா?? என்னென்ன மாதிரியேல்லாம் டீ ஆத்துறாங்கப்பா ஆளாளுக்கு.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
01-டிச-201905:49:01 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் // 5,027 கோடி ரூபாய் முதலீட்டில், 20 ஆயிரத்து, 351 பேருக்கு, வேலைவாய்ப்பு.. // செய்தி. கணக்கு பாத்தா ஆளுக்கு 25 லட்சம் வருது. பிரிச்சி கொடுத்தா இப்பவே செட்டில் ஆயிடுவாங்க டாக்டார்ர்..ஒரு ஆணியும் அசைக்க வேண்டாம். 😀
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X