அரசியல் செய்தி

தமிழ்நாடு

உற்சாக வரவேற்பு

Added : நவ 30, 2019
Advertisement

சென்னை வந்த, பா.ஜ., தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டாவிற்கு, விமான நிலையத்தில், பா.ஜ., கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

டில்லியில் இருந்து விமானத்தில், நேற்று சென்னை வந்த அவரை வரவேற்க, பா.ஜ.,வினர் திரளாக, விமான நிலையம் வந்தனர். பா.ஜ., மூத்த நிர்வாகிகள், அவருக்கு ஆளுயர மாலை, மலர் கிரீடம் அணிவித்து வரவேற்றனர்.விமான நிலையத்திற்கு வெளியே, மேளதாளங்கள் ஒலிக்க, பொய்க்கால் குதிரையாட்டம், கரகாட்டம் என, கிராமிய நடனங்களுடன், அவர் மீது மலர்களை துாவி, தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.மகளிர் அணி சார்பில், பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. வரவேற்பு முடிந்ததும், திருவள்ளூருக்கு காரில் புறப்பட்டு சென்றார்.
இணைந்தார் ராதாரவி
அ.தி.மு.க.,விலிருந்த நடிகர் ராதாரவி, நேற்று பா.ஜ., தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில், அக்கட்சியில் இணைந்தார்.இவர் முதலில், தி.மு.க.,வில் இருந்தார். அங்கு, நட்சத்திர பேச்சாளராக இருந்தார். தி.மு.க., தலைமையுடன், கருத்து வேறுபாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, தி.மு.க.,விலிருந்து விலகி, 2002ல், அ.தி.மு.க.,வில் இணைந்தார்; எம்.எல்.ஏ., ஆனார்.அடுத்து, அ.தி.மு.க., தலைமையுடன், கசப்பு ஏறப்ட்டதால், மீண்டும், தி.மு.க.,வில் இணைந்தார். கொலையுதிர் காலம் படம், 'டிரைலர்' வெளியீட்டு விழாவில், நடிகை நயன்தாரா குறித்து, இரட்டை அர்த்தத்தில் பேசியதால், தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டார்.அதைத் தொடர்ந்து, மீண்டும், அ.தி.மு.க.,விற்கு சென்றார். அங்கு, அவர் எதிர்பார்த்த பதவி கிடைக்கவில்லை; பொதுக் கூட்டங்களுக்கும் அழைக்கப்படவில்லை. இதனால், அதிருப்தியில் இருந்தவர், நேற்று பா.ஜ.,வில் இணைந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X