பொது செய்தி

தமிழ்நாடு

இதயத்தில் ஊற்றெடுக்கும் ஆனந்தம்

Added : நவ 30, 2019
Advertisement

'மனசுல நிம்மதியே போச்சுங்க...'தொழிலதிபராகட்டும்; தொழிலாளராகட்டும்... இந்த வார்த்தைகளை உச்சரிக்காதவர்கள் அரிதானவர்களே. மனதில், மகிழ்ச்சி மறையும்போது, நிம்மதியை இழக்கிறோம்.இதயம் நிறைய அன்பு நிறைந்திருக்கும்போது, ஆனந்தம் அளவில்லாமல் கிட்டுகிறது. இதுவே, நிலைத்து, நீடித்து இருக்க, மனம் விரும்புகிறது. ஆனால், புறச்சூழல்கள், பல நேரங்களில், அகச்சூழலை வெல்கிறது.
திருப்பூர் வந்திருந்த இதய நிறைவு நிறுவனத்தலைவர் ஸ்ரீகமலேஷ் தேசாய் பட்டேல், தொழிலதிபர்கள், தொழிலாளர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரையும் சந்தித்தார். உலகம் முழுக்க, 165 நாடுகளில், இதய நிறைவு தியானத்தைக் கற்றுத்தருகிறது, இந்த நிறுவனம்.இதய நிறைவு தியானம், எளிமையானதாக இருக்கிறது. மெனக்கெடல்கள் எதுவும் இன்றி, காலை மற்றும் மாலையில், 20 முதல் 30 நிமிடம் வரை, இதற்கென நேரத்தை ஒதுக்கினால், மகிழ்ச்சிகரமான மன நிலை கொண்டதாக மீதமுள்ள நேரம் அமைவதற்கான வாய்ப்பு இருக்கிறது.'மகிழ்ச்சியான மன நிலையுடன் இருக்கிறோம். திடீரென யாரோ ஒரு நபரால், ஏதோ ஒரு செயலால், திடீரென இந்த மன நிலை மாறுகிறது.
அதைப் பொருட்படுத்தாமல், கடந்து சென்றிருக்க முடியும். ஆனால் மனம் அதைப் பதிந்து கொள்கிறது. இனி எப்போது அந்தச் செயல் நிகழ்ந்தாலும், அந்த நபரைப் பார்த்தாலும், மகிழ்ச்சி பறிபோகிறது''பூச்செடியில் மொட்டு உருவானதைப் பார்க்கிறோம். சிறிது, சிறிதாக மொட்டு விரிகிறது. பூவாக மலர்கிறது. தினமும், அதைப் பார்த்து வரும் நமக்கு, பூ மீது ஈர்ப்பு உருவாகிறது. அதைப் பறிக்கலாம் என்கிற உணர்வுடன் செல்லும்போது, அந்தப் பூவை யாரோ பறித்து விடுகிறார்கள்.
பதிவுகள் பற்றாக மாறும்போது, துயரங்களும் உருவாகின்றன. பூ பற்றிய சிந்தையே நம்மை ஆட்கொள்கிறது''மகிழ்ச்சி பறிக்கப்படுவதற்குச் சின்னச் சின்ன உதாரணங்கள் இவை' என்கிறார் ஸ்ரீ கமலேஷ்ஜி.இதயத்தில் ஊற்றெடுக்கும் இறைஞானத்தை உணர வைக்கிற, இதய நிறைவு தியானம், நிச்சயமாய், மனிதருக்குள் மகிழ்ச்சியூற்றைப் பொங்கச் செய்துகொண்டே இருக்கும்!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X