அரசியல் செய்தி

தமிழ்நாடு

வாரிசு அரசியல் இல்லாத கட்சி பா.ஜ., பற்றி நட்டா பெருமிதம்

Added : நவ 30, 2019
Advertisement

திருவள்ளூர்:''அகில இந்திய அளவில், பதிவு பெற்ற அரசியல் கட்சிகளில், வாரிசு அரசியல் இல்லாத, ஒரே கட்சி, பா.ஜ., தான்,'' என, அக்கட்சியின், தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டா பேசினார்.

திருவள்ளூர், மதுரை, தேனி உள்ளிட்ட, 16 மாவட்டங்களில், பா.ஜ., அலுவலகங்கள் கட்டுவதற்கான, அடிக்கல் நாட்டு விழா, திருவள்ளூரில், நேற்று நடந்தது.பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அடிக்கல் நாட்டி பேசியதாவது:தொன்மையான பாரம்பரியம், கலை, பண்பாடு, கலாசாரம் உடையது தமிழகம். தமிழக கலாசாரம் இன்றி, இந்தியாவின் கலாசாரம் முழுமை பெறாது. அதனால் தான், மாமல்லபுரத்திற்கு சீன அதிபர் வருகையின் போது, பிரதமர் மோடி, தமிழர்களின் பாரம்பரிய உடை அணிந்து பங்கேற்றார்.தமிழகத்தின் வளர்ச்சியில், பா.ஜ., மிகுந்த அக்கறை கொண்டு உள்ளது. காங்., ஆட்சியில், தமிழகத்திற்கு வழங்கிய நிதியை விட, பா.ஜ., அரசு, 500 மடங்கு அதிகம் வழங்கி உள்ளது.ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், டில்லியில் மட்டுமே செயல்பட்டு வந்த, 'எய்ம்ஸ்' மருத்துவமனை, தற்போது, 22ஆக உயர்ந்துள்ளது. மேலும், மதுரையிலும், 1,200 கோடி ரூபாயில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது.தேசிய புலனாய்வு நிறுவன சட்டம் திருத்தப்பட்டு உள்ளதால், இந்தியாவிற்கு எதிராக, பயங்கரவாதம் எங்கு நடந்தாலும், அதை தடுத்து, நடவடிக்கை எடுக்க இயலும். காஷ்மீரில் ராணுவம் நடத்திய, 'சர்ஜிகல் ஸ்டிரைக்' நடவடிக்கையால், பாகிஸ்தான் அச்சம் கொண்டுள்ளது.மேலும், விவசாயிகளுக்கு மாதம், 6,000 ரூபாய்; சிறு, குறு விவசாயிகள் தொழில் துவங்க மானியம்; பிரதமரின் வீடு கட்டும் திட்டம் என, அடித்தட்டு மக்களுக்கு தேவையான பல்வேறு திட்டங்களால், தமிழக மக்கள், பா.ஜ.,விற்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.தமிழகத்தில், காங்., - தி.மு.க., கூட்டணி குழப்பத்தில் உள்ளது. மாறி மாறி தகவல்களை தெரிவிப்பதால், மக்கள், அக்கூட்டணி மீது, நம்பிக்கை இழந்துள்ளனர்.இந்தியா முழுவதும், 1,300க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் உள்ளன; அவற்றில், ஏழு தேசிய கட்சிகளில், வாரிசு அரசியல் இல்லாமல் இயங்கும் ஒரே கட்சி, பா.ஜ., தான்.எந்தவித அரசியல் பின்புலம் இல்லாமல், பிரதமரான மோடி, உள்துறை அமைச்சரான அமித் ஷா ஆகியோரே, இதற்கு சாட்சி.இவ்வாறு, அவர் பேசினார்.

ஆங்கிலத்தில் பேசிய அவரது உரையை, தேசிய செயலர் எச்.ராஜா தமிழில் மொழி பெயர்த்து கூறினார்.நிகழ்ச்சியில், தேசிய பொதுச்செயலர் முரளிதர் ராவ், முன்னாள் தலைவர் இல.கணேசன், முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்றனர். பின், தனியார் ஓட்டலில், மாநில, மாவட்ட நிர்வாகிகளுடன், ஜே.பி.நட்டா ஆலோசனை நடத்தினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X