பொது செய்தி

தமிழ்நாடு

டேஸ்ட்ல அள்ளுது

Added : நவ 30, 2019
Advertisement

இரவு 9:00 மணியிருக்கும்... பயணம் முடித்த குழந்தையோடு ஊர் திரும்பிய தம்பதியர் பஸ் ஸ்டாண்டில் இறங்குகின்றனர். 'ஒரு வழியா ஊரு வந்து சேந்தாச்சு... பஸ்ல வந்தது, அலுப்பா இருக்குங்க..' மனைவியின் சிணுங்கலை கேட்டு, 'நீ அடுத்து எதுக்கு மீட்டர் போட வரேன்னு புரியுது. ஓட்டல்லயே சாப்பிடலாங்கிற, அதானே..? என்றார் கணவர்.கணவரின் புத்திசாலித்தனத்தை ரசித்தபடியே அருகிலிருந்த, 'போர் மங்கீஸ்' ஹோட்டலுக்குள் நுழைந்தனர் இருவரும். ஒரே கூட்டம்...! 'ஒரு ஜப்பான் சிக்கன் பார்ர்ர்ர்சசல்..' என, சர்வர் ஆர்டர் கொடுத்துக்கொண்டிருக்க... 'அதென்ன ஜப்பான் சிக்கன்' அருகில் நின்றுகொண்டிருந்த சர்வரிடம் கேட்கிறார் மனைவி.'சிக்கனுடன் பால், கேப்சிகம், கேசோநட்ஸ், பெரிய வெங்காயம் சேர்த்து, வறுத்து பக்குவமாக பரிமாறினால், ஜப்பான் சிக்கன் ரெடி. லைட்டா இனிக்கும் இந்த சிக்கனை குட்டீஸ் முதல் அனைவரும் வெளுத்து கட்டுகின்றனர். அடுத்து மட்டன் முட்டை வறுவல், நாட்டுக்கோழி உப்புக்கறி அயிட்டங்கள் பலரது பேவரைட்டாக உள்ளது. மசாலா சிக்கன் ரைஸ், மட்டன் ரைஸ் டேஸ்ட்டுக்கும் இங்கே அடிமை ஜாஸ்தி. போர் மங்கிஸ் ஸ்பெஷல் கிரேவியும் இருக்கு. சுடச்சுட பரோட்டா, ரொட்டிக்கு சாப்பிட்டா... ப்பா.. டேஸ்ட் சும்மா அள்ளும்' என்றார் சர்வர்.காலை, 11:00 முதல் இரவு, 11:00 மணி வரை கடை உண்டு. டிச., 1 முதல், 'ஹேப்பி ஹவர்ஸ்' சர்வீஸ் மதியம், 12:00 முதல், மாலை, 6:00 மணி வரை வழங்க உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X