ஒரு வேட்பாளர், ஒரு தொகுதி

Added : நவ 30, 2019 | கருத்துகள் (1)
Advertisement


லோக்சபா தேர்தல் உள்பட, எந்தத் தேர்தலாக இருந்தாலும், ஒரு வேட்பாளர், ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடும் வகையில் தேர்தல் சட்டங்களில் திருத்தம் செய்ய தேர்தல் கமிஷன் பரிந்துரைந்துள்ளது.

இரண்டில் போட்டியிட்டு, ஒன்றை ராஜினாமா செய்யும்போது, அதற்காகும் தேர்தல் செலவை வேட்பாளரிடம் இருந்து வசூலிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தேர்தல் கமிஷன் மத்திய அரசுடன் விரைவில் பேச உள்ளது.தேர்தலை நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடத்துவதற்கு, தேர்தல் கமிஷன் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, தேர்தல் விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றன.இந்நிலையில், பல முக்கிய சீர்திருத்த நடவடிக்கைகளை, தேர்தல் கமிஷன் பரிந்துரை செய்துள்ளது.சந்திப்புஇதற்கு மத்திய அரசின் ஒப்புதல் பெறுவதற்காக, மத்திய சட்டத் துறைச் செயலருடன், தேர்தல் கமிஷன் பேச உள்ளது.தற்போது நடைபெறும் பார்லி., கூட்டத் தொடர், டிச., 13ல் முடிகிறது. அதன்பிறகு இந்த சந்திப்பு இருக்கலாம் என தெரிகிறது.இந்தக் கூட்டத்தின்போது விவாதிக்கப்பட உள்ள முக்கிய தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து, தேர்தல் கமிஷன் உயர் அதிகாரிகள் கூறியதாவது:சட்டசபை, லோக்சபா என, எந்தத் தேர்தலாக இருந்தாலும், ஒருவர், இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிட முடியாது என, சட்டம் உள்ளது. ஒரு காலத்தில், இந்தக் கட்டுப்பாடு இல்லாமல் இருந்தது.முன்னாள் பிரதமரான, பா.ஜ.,வைச் சேர்ந்த மறைந்த வாஜ்பாய், 1957 லோக்சபா தேர்தலில் மூன்று தொகுதிகளில் போட்டியிட்டார். பகுஜன் சமாஜ் தலைவரான, உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதியும், 1991ல், மூன்று தொகுதிகளில் போட்டியிட்டார்.தற்போதைய நிலையில், ஒருவர் இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிட முடியாது. அவ்வாறு இரண்டிலும் வென்றால், ஒரு தொகுதிக்கான பதவியை ராஜினாமா செய்கிறார். இதனால், அங்கு இடைத் தேர்தல் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படுவதால், கூடுதல் செலவாகிறது.இதை தடுப்பதற்காக, ஒருவர், ஒரு தொகுதிக்கு மேல் போட்டியிடக் கூடாது என்று சட்டத் திருத்தம் செய்யப்பட வேண்டும். இதை, மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளோம். அவ்வாறு இல்லாத பட்சத்தில், ஒரு தொகுதிக்கான பதவியை ராஜினாமா செய்பவரிடம் இருந்து, அந்த தொகுதிக்கான இடைத் தேர்தல் செலவை வசூலிக்க வேண்டும்.
புதிய வாக்காளர்கள்
தற்போதைய சட்டங்களின்படி, ஜன., 1ம் தேதியை அடிப்படையாக வைத்து, 18 வயது நிறைவு செய்வோர், வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ளலாம். ஆனால், அதன்பிறகு, 18 வயதை நிறைவு செய்வோர், அடுத்த ஜனவரி வரை காத்திருக்கும் நிலை உள்ளது. அதனால், அவர்கள் சில தேர்தலில் ஓட்டு போடும் வாய்ப்பு கிடைக்காமல் போய்விடுகிறது.இதை தவிர்க்க, ஜன., 1; ஏப்., 1; ஜூலை, 1; அக்., 1 என நான்கு நாட்களை அடிப்படை தேதியாக அறிவிக்க வேண்டும். இது குறித்தும், மத்திய அரசுடன் பேச உள்ளோம்.அதிகாரம்தலைமை தேர்தல் கமிஷனராக உள்ளவரை பதவியில் இருந்து நீக்க வேண்டுமானால், பார்லி.,யில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். ஆனால், தேர்தல் கமிஷனர்களை, தலைமை தேர்தல் கமிஷனரின் ஒப்புதலோடு நீக்கிவிடலாம். தலைமை தேர்தல் கமிஷனருக்கு உள்ள சலுகை, தேர்தல் கமிஷனர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

லோக்சபா, ராஜ்யசபா வுக்கு உள்ளது போல், தேர்தல் கமிஷனுக்கும் தனி செயலகம் உருவாக்க வேண்டும். இதன் மூலம் நிதி தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படும்.'பெய்டு நியூஸ்' எனப்படும், பணம் கொடுத்து செய்தி வெளியிடச் செய்வது, வேட்பு மனுவில் தவறான தகவல் தெரிவிப்பது போன்றவற்றை குற்றமாக்கி, இரண்டு ஆண்டுகள் வரை தண்டனை அளிக்க வேண்டும். இந்த சீர்திருத்தங்கள் தொடர்பாகவும், மத்திய அரசுடன் விவாதிக்கப்பட உள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
- நமது சிறப்பு நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X