காகித அளவில் நின்ற சம்பள அறிவிப்பு: துப்புரவு ஊழியர்கள் ஏமாற்றம்

Added : நவ 30, 2019
Advertisement

அவிநாசி:முழு சுகாதாரப்பணியில் முனைப்புடன் ஈடுபடும், ஆர்.சி.எச்., துப்புரவு ஊழியர்களுக்கு, கலெக்டர் நிர்ணயிக்கும் சம்பளம் வழங்கப்படாமல் இருப்பது, அவர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.மத்திய அரசின், தேசிய கிராமப்புற சுகாதார திட்டத்தில், 10 ஆண்டுகளுக்கு முன், மாநிலத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில், துப்புரவு ஊழியர்கள், இரவு காவலர் என, 10 ஆயிரம் பேர் பணியமர்த்தப்பட்டனர். இவர்களுக்கு மாதம், 1,500 ரூபாய் மட்டுமே சம்பளம் வழங்கப்படுகிறது.திருப்பூர் மாவட்டத்தில் மட்டும், 100க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். தற்போது டெங்கு ஒழிப்பு பணி முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில், அவர்களது பங்களிப்பு அதிகம். துப்புரவு பணி, கொசு ஒழிப்புப்பணி என, பல்நோக்கு பணியாளர்களாக அவர்கள் பணி செய்கின்றனர்.'இவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்' என, வலியுறுத்தி, தொழிற்சங்கத்தினர், ஐகோர்ட்டில் தொடுத்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை மையமாக வைத்து, கடந்த, 2017, ஏப்., 5ல், மக்கள் நலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அரசாணை வெளியிட்டது.அதில், 'குறைந்தபட்ச கூலி சட்டத்தின் அடிப்படையில், 3,140 துப்புரவு ஊழியர்களுக்கு, கலெக்டரால் நிர்ணயிக்கப்படும் தினக்கூலியை அடிப்படையாக வைத்து, அதற்கு நிகரான சம்பளம் வழங்க, பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறை இயக்குனருக்கு உத்தரவிடப்பட்டது.ஆனால், திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை, இந்த உத்தரவு அமலுக்கு வராததால், சொற்ப சம்பளத்தில் மட்டுமே அவர்கள் பணிபுரிகின்றனர். பணிச்சுமை கருதி, கலெக்டர் நிர்ணயித்த சம்பளம் வழங்க வேண்டும் என்பதே, அவர்களின் எதிர்பார்ப்பு.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X