திருப்பூர்:ஸ்ரீஷீரடி சாய்பாபா கோவில், ஏழாம் ஆண்டு துவக்கவிழாவை முன்னிட்டு, ஆயிரத்து எட்டு சங்காபிேஷகம் மற்றும் கலசாபிேஷகம் இன்று நடக்கிறது.திருப்பூர் ஸ்ரீஷீரடி சாய் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில், யுனிவர்சல் தியேட்டர் அருகே, ஸ்ரீஷீரடி சாய் பாபா கோவில் உள்ளது. கோவிலின், ஏழாம் ஆண்டு துவக்க விழா நேற்று துவங்கியது. நேற்று மாலை, 6:30 மணிக்கு பல்லக்கு ஊர்வலம் நடந்தது.இன்று காலை, 7:00 மணிக்கு, ஆயிரத்து எட்டு சங்காபிேஷகம், கலசாபிேஷகம் மற்றும் வேள்வி பூஜைகள் நடக்கின்றன. அவிநாசி ஆதீனம் காமாட்சிதாச சுவாமிகள், பூஜைகளை நடத்தி வைக்கிறார். மதியம், 12:00 மணிக்கு, சிறப்பு அலங்கார ஆரத்தியும், மதியம், 12:30 மணிக்கு அன்னதானம், மாலையில் சிறப்பு ஆரத்தியும் நடக்க உள்ளது.விழாவையொட்டி, சொற்பொழிவாளர் மணிகண்டனின் ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது.