பொது செய்தி

தமிழ்நாடு

ராசி பலன்களுடன் தமிழ் டைரி: கடைகளில் விற்பனை துவங்கியது

Added : நவ 30, 2019
Advertisement
 ராசி பலன்களுடன் தமிழ் டைரி: கடைகளில் விற்பனை துவங்கியது

திருப்பூர்:அடுத்த, 2020ம் ஆண்டின், ஒவ்வொரு நாட்களின் ராசி பலன்களை குறிப்பிட்ட 'தமிழ் டைரி' விற்பனைக்காக வந்து உள்ளது.ஆங்கில் புத்தாண்டு பிறக்க, ஒரு மாதமே உள்ள நிலையில், தமிழகத்தில், டைரிகள் விற்பனை துவங்கியுள்ளது. முன்னணி நிறுவனங்கள், பல்வேறு சிறப்பு அம்சங்களை உள்ளடக்கிய, டைரிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, தகவல்கள், பக்கங்கள் மற்றும் பல்வேறு வசதிகளுக்கு ஏற்ப, டைரிகளின் விலையும் மாறுபடுகின்றன. அதாவது, 30 முதல், 800 ரூபாய் விலையில், டைரிகள் விற்கப்படுகின்றன.டைரியை பொறுத்தமட்டில், பஞ்சாங்கம், நாட்குறிப்புகள், பல்வேறு ராசி பலன், பண்டிகை விவரங்கள், கோவில்களில் வழிபடும் முறை, வீட்டுக் குறிப்புகள் என்பன உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இதுதவிர, 2020ம் ஆண்டின், ஒவ்வொரு நாட்களின் ராசி பலன்கள் குறிப்பிடப்பட்டுள்ளதால், மக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.வியாபாரிகள் கூறுகையில், 'பயண விவரம், வரவு செலவு, வருடாந்திர முக்கிய நிகழ்வு நாட்களை முன்னதாகவே குறித்து வைத்து, திட்டமிட்டு செயல்பட டைரி உதவுகிறது. ஆண்டுதோறும் டைரி விற்பனை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இந்தாண்டாவது விற்பனை அதிகாரிக்கும் என, எதிர்பார்க்கிறோம்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X