பொது செய்தி

இந்தியா

'ரபேல்' குற்றச்சாட்டு டி.ஆர்.டி.ஓ., மறுப்பு

Added : நவ 30, 2019
Advertisement

புதுடில்லி:டி.ஆர்.டி.ஓ., எனப்படும், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்துள்ள, பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை குறித்து, இஸ்ரேலின் ரபேல் நிறுவனம் கூறிய கருத்து, சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு, டி.ஆர்.டி.ஓ., தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலைச் சேர்ந்த ரபேல் நிறுவனத்திடமிருந்து, ஸ்பைக் எனப்படும், பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்க, மத்திய அரசு ஒப்பந்தம் செய்திருந்தது. இந்த ஒப்பந்தப்படி, திட்டமிட்ட காலத்தில், 8,356 ஏவுகணைகளை வாங்க முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், இதேபோன்ற ஏவுகணைகளை உள்நாட்டிலேயே தயாரிக்க முடியும் என, டி.ஆர்.டி.ஓ., தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, ரபேல் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்தது.டி.ஆர்.டி.ஓ., தயாரித்த ஸ்பைக் ஏவுகணைகள், சமீபத்தில், மத்திய பிரதேசத்தில் வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டன.

இதையடுத்து, 'டி.ஆர்.டி.ஓ., தயாரித்துள்ள ஏவுகணைகளை விட, நாங்கள் தயாரிக்கும் ஏவுகணை, அதிக சக்தியும், திறனும் வாய்ந்தது.'இந்த விவகாரத்தில், இந்திய ராணுவம், தன் முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும்' என, ரபேல் நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்த விவகாரம், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு, டி.ஆர்.டி.ஓ., பதிலடி கொடுத்துள்ளது. தவறான தகவல்களின் அடிப்படையில், ரபேல் நிறுவனம் இந்த அறிக்கையை வெளியிட்டு உள்ளதாக, டி.ஆர்.டி.ஓ., தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X