திருப்பூர்:சகோதயா பள்ளிக்கு இடையேயான தடகள போட்டியில், விவேகானந்தா அகாடமி சாம்பியன் பட்டம் வென்றது.கோவை சகோதயா, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் கூட்டமைப்பு சார்பிலான தடகள போட்டி, கோவை பாரதியார் பல்கலை திடலில் நடந்தது.இப்போட்டியில், கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல மாவட்ட சி.பி.எஸ்.இ., பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர். முதன்மை கல்வி அலுவலர் அய்யணன், போட்டியை துவக்கி வைத்தார். அதில், காங்கயம் விவேகானந்தா அகாடமி மாணவ, மாணவியர், 19 வயது பிரிவு போட்டியில், அதிக இடங்களில் வெற்றி பெற்று, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் தட்டி சென்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், உடற்பயிற்சி ஆசிரியர் உட்பட பலரும் வாழ்த்தினர்.