படிக்க திணறிய ஆசிரியை உ.பி., பள்ளியில் அவலம்

Updated : டிச 01, 2019 | Added : நவ 30, 2019 | கருத்துகள் (37)
Advertisement

உன்னாவ் : உத்தர பிரதேச மாநிலம், உன்னாவில் உள்ள ஒரு பள்ளியில், பாடத்தை படிக்க முடியாமல், மாணவர்கள் திணறினர். அவர்களுக்கு பாடம் சொல்லித் தரும் ஆசிரியையும் படிக்க முடியாமல் திணறினார்.






உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்து உள்ளது. மாநிலத்தில் கல்வியின் தரம் மோசமாக உள்ளதாக அடிக்கடி செய்திகள் வெளியாகி வருகின்றன.


சோதனை


இந்நிலையில், தான் சொல்லித் தரும் பாடத்தையே படிக்க முடியாமல் ஆசிரியை ஒருவர் திணறிய சம்பவம் அங்கு நடந்துள்ளது. உன்னாவ் நகருக்கு அருகில் உள்ள, சிக்கந்தர்பூர் சரவ்சி கிராமப் பள்ளியில், மாவட்ட கலெக்டர் தேவேந்திர குமார் பாண்டே, சமீபத்தில் திடீரென சோதனை செய்தார். அப்பள்ளி மாணவர்களை, பாடங்களை படித்துக் காட்டும்படி கூறியுள்ளார். ஹிந்தி மொழி வழியான பாடங்களை மாணவர்கள் படித்துக் காட்டினர். அவர்களுக்கு கலெக்டர் பாராட்டு தெரிவித்தார்.





மாணவர்களின் ஆங்கில திறமையை சோதித்து பார்த்தார் கலெக்டர். அவர்கள், கோர்வையாக படிக்க முடியாமல் திணறினர். 'ஏன் மாணவர்கள் திணறுகின்றனர்? நீங்கள் கொஞ்சம் சொல்லித் தாருங்கள்' என, எட்டாம் வகுப்பு ஆங்கில ஆசிரியையை பாடம் எடுக்கும்படி, கலெக்டர்கூறினார்.


கேள்வி


மாணவர்களே பரவாயில்லை என்று கூறும் அளவுக்கு, ஆசிரியை திக்கித் திணறி படித்தார். ஒரு பத்தியை படிப்பதற்குள், அவருக்கு மூச்சு முட்டிவிட்டது. 'நீங்களே சரியாக படிக்காவிட்டால், மாணவர்களுக்கு எப்படி சொல்லித் தருவீர்கள்?' என்று, கலெக்டர் கேள்வி எழுப்பினார்.





இதைத் தொடர்ந்து, மேலும் சில வகுப்பறைகளில் சோதனை நடத்தினார். அப்போது, இன்னொரு ஆசிரியையும், ஆங்கிலம் படிக்கத் தெரியாமல், திக்கித் திணறினார். இவர்கள் இருவரையும், 'சஸ்பெண்ட்' செய்ய, கலெக்டர் பரிந்துரை செய்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaji - Khaithan,குவைத்
01-டிச-201918:03:11 IST Report Abuse
Balaji வடமாநிலங்களில் எப்போதுமே கல்வியின் தரம் சற்று பின்தங்கி தான் இருக்கிறது...... ஆசிரியர் தேர்வு முறையில் மிகுந்த கவனம் செலுத்தி தேர்ந்தெடுப்பது வடமாநிலங்கள் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும்........
Rate this:
Share this comment
Cancel
Rajas - chennai,இந்தியா
01-டிச-201913:02:56 IST Report Abuse
Rajas ஆனால் இவர்களுக்கு தமிழ் நன்றாக தெரியும். தமிழ்நாட்டின் மத்திய அரசு பணிக்கு பரீட்சை எழுதும் இவர்களில் பலர் தமிழில் கவிதை எழுதும் அளவிற்கு இருக்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
01-டிச-201912:27:25 IST Report Abuse
Nallavan Nallavan தமிழகத்தில் இது போன்ற ஆய்வுகள் நடத்தப்படுவதில்லையோ ?? அப்படி நடந்தாலும் அதைப்பற்றிய செய்திகள் வருவதில்லையே ??
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
01-டிச-201913:26:13 IST Report Abuse
தமிழ்வேல் ஒருகால், தமிழகத்தில் ஆசிரியர்கள் தமிழில் மோசமாக இருக்கலாம். ஆனால், ஆங்கிலத்தில் அங்குள்ள அளவிற்கு மோசமில்லை......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X