பொது செய்தி

இந்தியா

ஹெல்மெட் அணிந்து வெங்காயம் விற்பனை

Added : டிச 01, 2019
Advertisement
 ஹெல்மெட் அணிந்து வெங்காயம் விற்பனை

பாட்னா:பீஹாரில், குறைந்த விலை வெங்காயம் வாங்க அலைமோதும் கூட்ட நெரிசலை சமாளிக்க, அம்மாநில கூட்டுறவு சங்கத்தினர், 'ஹெல்மெட்' எனப்படும் தலைகவசம் அணிந்து, வெங்காயம் விற்பனை செய்கின்றனர்.

பீஹாரில், முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இங்கு, 1 கிலோ வெங்காயம் 80 ரூபாய்க்கும் அதிகமாக விற்கப்படுகிறது. இதனால், மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கூட்ட நெரிசல்இதையடுத்து, பீஹார் அரசு, மாநில கூட்டுறவு கழகம் மூலம், மலிவு விலை வெங்காய விற்பனைக்கு ஏற்பாடு செய்துள்ளது. இங்கு, வெங்காயம் கிலோ, 35 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒருவருக்கு, 2 கிலோ வெங்காயம் மட்டுமே வழங்கப்படுகிறது. அதை வாங்க, ஏராளமானோர் முண்டியடித்து வருவதால், கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. ஒரு சில இடங்களில், கல்வீச்சு சம்பவங்களும் நடந்தன.இதனால், மாநில கூட்டுறவு சங்க விற்பனையாளர்கள், முன்னெச்சரிக்கையாக, தலைகவசம் அணிந்து, வெங்காயம் விற்பனை செய்கின்றனர். 'போலீஸ் பாதுகாப்பு இல்லாத நிலையில், தலைகவசம் தான் எங்கள் துணை' என, விற்பனையாளர் ஒருவர் தெரிவித்தார்.

நாடு முழுவதும், வெங்காயம் விலை, கிலோ,100 ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. திருட்டு அதிகரிப்புடில்லி, குஜராத், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில், கடைகளில் இருந்து வெங்காயம் திருடிச் செல்வது அதிகரித்துள்ளது. மத்திய பிரதேசத்தில், 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெங்காயம் ஏற்றிச் சென்ற லாரியை, சிலர் கடத்திச் சென்று விட்டனர். இதையொட்டி, மத்திய அரசு, எகிப்து, துருக்கி, ஹாலந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து, 1.20 லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X