டிச., 6ல் வெற்றி தின கொண்டாட்டம் இல்லை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

டிச., 6ல் வெற்றி தின கொண்டாட்டம் இல்லை

Added : டிச 01, 2019
Share
லக்னோ:'அயோத்தி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகி உள்ளதால், டிச., 6ல் வெற்றி தின கொண்டாட்டங்கள் இருக்காது' என, ஹிந்து அமைப்புகள் தெரிவித்துள்ளன.உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இங்கு, அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலத்தில் இருந்த, பாபர் மசூதி, 1992, டிச., 6ல் இடிக்கப்பட்டது. அதையடுத்து, ஒவ்வொரு ஆண்டும், டிச., 6ஐ,

லக்னோ:'அயோத்தி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகி உள்ளதால், டிச., 6ல் வெற்றி தின கொண்டாட்டங்கள் இருக்காது' என, ஹிந்து அமைப்புகள் தெரிவித்துள்ளன.

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இங்கு, அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலத்தில் இருந்த, பாபர் மசூதி, 1992, டிச., 6ல் இடிக்கப்பட்டது. அதையடுத்து, ஒவ்வொரு ஆண்டும், டிச., 6ஐ, 'வெற்றி தினம்' என, ஹிந்துஅமைப்புகள் கொண்டாடும். அதே நேரத்தில், இந்நாளை, முஸ்லிம் அமைப்புகள், 'துக்க நாளாக' அனுசரிக்கும்.அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு அளித்தது. 'அந்த இடத்தில், ஹிந்து கடவுள் ராமருக்கு கோவில் கட்டலாம்; மசூதி கட்டுவதற்காக, முஸ்லிம்களுக்கு அயோத்தியின் முக்கிய இடத்தில், 5 ஏக்கர் நிலம் ஒதுக்க வேண்டும்' என, தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, ராம் ஜென்மபூமி நியாஸ் அமைப்பின் தலைவர் நிருத்ய கோபால் தாஸ் கூறியதாவது:அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அதனால், வெற்றி தினத்தை கொண்டாட வேண்டிய அவசியம் ஏதும் இல்லை. இந்த நாளில், மக்கள் தங்களுடைய வீடுகளிலும், கோவில்களிலும் அகல் விளக்குகள் ஏற்றி, மத நல்லிணக்கத்துக்காக, ராமரிடம் பிரார்த்திக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்போது, அனைவரும் ஒற்றுமையாக அமைதி மற்றும் மதநல்லிணக்கத்தை கடைப் பிடித்தோம். அதுபோலவே, டிச., 6ம் தேதியும் செயல்பட வேண்டும் என, கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு, அவர் கூறினார்.வி.எச்.பி., எனப்படும் விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட ஹிந்து அமைப்புகளும், இதே கருத்தை தெரிவித்துள்ளன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X