பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்ட ஹாக்கி அணியில் 'சென்சுரி' மாணவிக்கு இடம்

Added : டிச 01, 2019
Advertisement

திருப்பூர்;மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் பங்கேற்கவுள்ள, திருப்பூர் மாவட்ட அணியில், சென்சுரி பவுண்டேஷன் மாணவியர் இடம்பிடித்துள்ளனர். திருப்பூர் மாவட்ட ஹாக்கி அணிக்கான தேர்வுப் போட்டி, திருப்பூர் மாவட்ட ஹாக்கி சங்கம் சார்பில் நடத்தப்பட்டது. உடுமலை ஆர்.வி.ஜி., பள்ளியில் நடந்த தேர்வு போட்டியானது, 16 மற்றும், 19 வயது பிரிவுகளின் கீழ் நடந்தது. பல்வேறு பள்ளி மற்றும் கல்லுாரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.அதில், 19 வயதுக்கு உட்பட்ட மாணவியர் பிரிவில், திருப்பூர் சென்சுரி பவுண்டேஷன் பள்ளி மாணவியர் ஜனனி, ராஷ்மி ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, மாவட்ட அணியில் இடம் பிடித்துள்ளனர். அதன்வாயிலாக, கிருஷ்ணகிரியில் நடக்கும் மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் பங்கேற்கவும் உள்ளனர். இவர்களை, பள்ளி தாளாளர் சக்திதேவி, முதல்வர் ரேணுகா, பயிற்சியாளர் பாலசுப்ரமணியன் ஆகியோர் வாழ்த்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X