பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் சார்பில், பரமக்குடியில் ஆசிரியர்களுக்கு நிஷ்தா பயிற்சி முகாம் நடந்தது. தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் முழு மேம்பாட்டிற்காக முன்னெடுப்புப் பயிற்சி 5 நாட்கள் நடந்தது. பரமக்குடி கீழ முஸ்லிம் மேல் நிலைப்பள்ளியில் நடந்த இப்பயிற்சியில் நயினார்கோவில், பரமக்குடி, போகலூர் ஒன்றியங்களைச் சேர்ந்த 165 தொடக்க நிலை ஆசிரியர்கள் பங்கேற்றனர். தலைமையாசிரியர் அஜ்மல்கான் தலைமை வகித்தார். நயினார்கோவில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் இளவரசி வரவேற்றார்.தமிழ்மொழி கற்பித்தல், கற்போர் மைய கற்பித்தல், கற்றல் விளைவுகள், கலைத் திட்டம், உள்ளடங்கிய கல்வி என 12 தலைப்பில் பயிற்சி அளிக்கப்பட்டது. மஞ்சூர் அரசு ஆசிரியர் பயிற்சி மைய விரிவுரையாளர் செந்தில்குமார், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் பயிற்சி அளித்தனர். க்யூ.ஆர். குறியீடு மூலம் இணைய தளம் வழியாக ஆசிரியர்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டன.