சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

காமராஜர் வீட்டை ஏலம் விட தமுக்கு அடிக்கப்பட்டது!

Added : டிச 01, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 காமராஜர் வீட்டை  ஏலம் விட தமுக்கு  அடிக்கப்பட்டது!

உலகத் தமிழர் பேரவை என்ற அமைப்பின் தலைவர் பழ நெடுமாறன்: சென்னை, தி.நகரில், திருமலைப்பிள்ளை சாலையில், 8ம் எண் வீட்டில், மாதம், 250 ரூபாய் வாடகைக்கு, காமராஜர் குடியிருந்தார். அந்த வீட்டின் உரிமையாளர் பெயர், கோவிந்தராஜ்; காமராஜர் குடியிருந்த வீட்டுக்கு அடுத்த, 9ம் எண் வீட்டில், குடும்பத்துடன் வசித்து வந்தார். அந்த இரண்டு வீடுகளை அடமானம் வைத்து, கோவிந்தராஜ் ஏராளமாக கடன் வாங்கியிருந்தார். அவருக்கு கடன் கொடுத்த, பாப்பா லால் என்ற மார்வாடி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இரண்டு வீடுகளையும் ஏலம் விட, நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இதை அறிவிக்கும் விதமாக, காமராஜர் குடியிருந்த, 8ம் எண் வீடு முன் நின்று, தமுக்கடித்து, மக்களுக்கு அறிவிப்பு செய்யப்பட்டது.இதை அறிந்து, காமராஜர் வேதனை அடைந்தார். ஆனால், அந்த வீட்டில் தான், காமராஜர் வாடகைக்கு குடியிருக்கிறார் என்பது, பாப்பா லாலுக்கு தெரியாது. காமராஜர் மீது மிகுந்த அன்பு வைத்திருந்த பாப்பா லால், காமராஜரின் நண்பரான தாமோதரனை சந்தித்து, 'அந்த வீட்டில், காமராஜர் குடியிருக்கிறார் என்பது எனக்குத் தெரியாது; தவறு நடந்து விட்டது. 'காமராஜருக்கே அந்த வீட்டை பத்திரம் போட்டுத் தர தயாராக இருக்கிறேன். ஏதாவது, ஒரு காசு போட்டு, பத்திரம் பண்ணுங்க' என்றார்.இந்த தகவலை, காமராஜரிடம் தாமோதரன் தெரிவித்தார். ஆனாலும், அந்த வீட்டில் குடியிருக்க பிடிக்காமல், வேறு வீட்டை வாடகைக்கு பார்க்குமாறு, கட்சியினரிடம் கேட்டுக் கொண்டார். வேறு வீடு பார்க்க, காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு விருப்பம் இல்லை. காமராஜர் வசித்த அந்த வீடு, வரலாற்றுச் சிறப்பு மிக்கது. உலகத் தலைவர்கள், உள்நாட்டுத் தலைவர்கள் பலர், அந்த வீட்டிற்கு வந்து, காமராஜரை சந்தித்துள்ளனர். எனவே, தமிழக காங்கிரஸ் கட்சியே, அந்த வீட்டை வாங்கி விடுவது என, நிர்வாகிகள் விரும்பினர். அப்போது அந்த வீட்டின் விலை, 2.10 லட்சம் ரூபாய் தான். எனினும், காமராஜர் ஏற்கவில்லை. காமராஜரின் நண்பரான திருச்சி தாப்பா ரெட்டியார், அந்த வீட்டை, காமராஜருக்கு தானமாக வாங்கிக் கொடுக்க முன்வந்தார்; அதையும் காமராஜர் ஏற்கவில்லை.
இதற்கிடையே, 'நவசக்தி' இதழ் சார்பில், அந்த வீட்டை விலைக்கு வாங்குவது என, முடிவானது; காமராஜர் ஏற்றுக் கொண்டார். வாங்குவதற்குள், காமராஜர் மறைந்து விட்டார். கடைசி வரை, வாடகை வீட்டில் வசித்த ஒரே தலைவர் அவர் தான். ஆனால், அவரின் முயற்சியால், சென்னை மற்றும் பிற இடங்களில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு, பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துகள் சேர்க்கப்பட்டன!

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Charles - Burnaby,கனடா
01-டிச-201921:47:29 IST Report Abuse
Charles அந்த வீட்டை ஒரு கோயிலாக கூட கருதலாம். நாட்டு பற்றை காப்பது மனிதர்களில் மாணிக்கக்கத்துக்குதான் முடியும்,,
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X