அரசியல் கட்சியினரால் பள்ளி சுவர் அலங்கோலம்

Added : டிச 01, 2019
Advertisement

திருப்பூர்:மாநகராட்சி பள்ளி சுவரை போஸ்டர் ஒட்டும் இடமாக அரசியல் கட்சியினர் மாற்றி விட்டனர். இதன் மீது உரிய நடவடிக்கை எடுத்து தடுக்க வேண்டும்.அரசு துறை கட்டடங்களில் போஸ்டர், நோட்டீஸ் ஒட்டுதல் விளம்பரம் செய்தல் போன்றவை தடை செய்யப்பட்டுள்ளன. அவ்வகையில் கல்வி நிறுவனங்கள், துறைரீதியான அலுவலகங்கள் உள்ளிட்ட அரசு கட்டடங்களிலும், அவற்றின் சுற்றுச் சுவர்களிலும், இது போன்ற விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான கட்டடங்களின் சுற்றுச் சுவர்களில் வண்ண பெயின்ட் அடித்து, அவற்றில் அரசு தொடர்பான திட்டங்கள், செயல்பாடுகள் குறித்த விவரங்கள், விழிப்புணர்வு வாசகங்கள் எழுதும் வழக்கம் தற்போது பின்பற்றப்படுகிறது.இருப்பினும் ஒரு சில கட்டடங்களில், வெள்ளை அடிக்கப்படாமல், சுவர்கள் உரிய பராமரிப்பின்றி வெறுமெனவும் காட்சியளிக்கின்றன. இவற்றை அரசியல் கட்சியினர், சில தனியார் வர்த்தக நிறுவனங்கள் தங்கள் விளம்பரத்துக்கு பயன்படுத்தி கொள்கின்றன.திருப்பூர் கே.எஸ்.சி., பள்ளி எதிரே, மாநகராட்சி பழைய நகர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி உள்ளது. இதன் சுற்றுச் சுவர் 100 மீட்டர் நீளத்துக்கும் மேல் உள்ளது. இந்த சுவர் முழுவதும் அரசியல் கட்சியினரும், வர்த்தக நிறுவனத்தினரும் தங்கள் விளம்பர போஸ்டர் மற்றும் நோட்டீஸ்களை ஒட்டி ஆக்கிரமித்துள்ளனர்.பள்ளி சுவரில் இது போன்ற விளம்பரம் செய்யும் செயலை உரிய நபர்கள் கைவிட வேண்டும். மீறும் நபர்கள் மீது உரிய பிரிவுகளில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X