பொது செய்தி

தமிழ்நாடு

மழை நீரில் மிதக்கும் ராமநாதபுரம்

Added : டிச 01, 2019
Advertisement
 மழை நீரில் மிதக்கும் ராமநாதபுரம்

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் கன மழையால் அனைத்து பகுதிகளும் தண்ணீரில் மிதக்கிறது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவிக்கின்றனர்.

அனைத்து துறைகளையும் முடுக்கிவிட்டு வேலை வாங்க வேண்டிய மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளாமல் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளது.ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக பல்வேறு குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் தவிக்கின்றனர். அனைத்து பகுதிகளிலும் பாதாள சாக்கடை திட்டம் செயல் இழந்து போனது. தெருக்களில் மழை நீருடன் பாதாள சாக்கடை கழிவு நீரும் செல்வதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் ராமநாதபுரம் நகர் பகுதியில் 11 செ.மீ., மழை பெய்துள்ளது.பழைய பஸ் ஸ்டாண்ட்பழைய பஸ்ஸ்டாண்ட பகுதி தாழ்வான பகுதியாகும். இங்கு ரோடுகளும் சேதமடைந்துள்ளது. இதனால் மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளது. பஸ்களை ரோட்டில் நிறுத்தி பயணிகளை இறக்கி ஏற்றுகின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.பள்ளிக்குள் புகுந்த வெள்ள நீர்ராமநாதபுரம் நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள வள்ளல் பாரி நடுநிலைப்பள்ளியில் மழை நீர் குளம் போல் தேங்கியது. பள்ளி விடுமுறை விடப்பட்டதால் பாதிப்பு ஏற்படவில்லை. தொடர்ந்து கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், பாதிப்புஅதிகளவில் இருக்கும். பள்ளிக்குள் தேங்கிய நீரை வெளியேற்ற வேண்டும்.இரவு முழுவதும் இருள்கன மழையால் பல்வேறு பகுதிகளில் இரவு முழுவதும் மின் தடை ஏற்பட்டது. மக்கள் இரவில் வீடுகளில் தவித்தனர். ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகம் முன்பு உயரழுத்த இரும்பு மின் கம்பம் உடைந்து விழுந்தது. அப்பகுதியில் சுங்கத்துறை அலுவலகம், மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகம் பகுதிகளில் பல மின் கம்பங்கள் சாய்ந்தன. இதனால் அப்பகுதியினர் மின்சாரம் இன்றி தவித்தனர்.ஆயுதப்படை மைதானம்ராமநாதபுரம் ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் முழவதும் குளம் போல் மழை நீர் தேங்கியிருந்தது. குடியிருப்பு பகுதியில் மரங்கள் சாய்ந்தன. இதனால் போலீஸ் குடியிருப்பு வளாகம் முழுவதும் சேறும், சகதியுமாக காட்சியளித்தது. குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டனர். கேணிக்கரை பகுதி, கலெக்டர் அலுவலகம் மற்றும் பல்வேறு பகுதிகளில் மரங்கள் சாய்ந்து விழுந்தன.ஊரணிகள் நிறைந்தனராமநாதபுரம் நகர் பகுதியில் உள்ள சோத்துாரணி, நீலகண்டி ஊரணி, அய்யர் மடம் ஊரணி, பேராவூர் ஊரணி, உள்ளிட்டஅனைத்து ஊரணிகளும் நிறைந்தன. சூரங்கோட்டை ஊராட்சியில் உள்ள மடத்து ஊரணி கரைகள் உடைந்து அப்பகுதியில் வெள்ளபெருக்கு ஏற்பட்டது. பழங்குளம் கண்மாய் நிறைந்து மறுகால் பாய்கிறது. பல இடங்களில் தொடர்ந்து நீர் வரத்து இருப்பதால் நீர் நிலைகள் கரைகள்பலமிழந்து உடையும் அபாய நிலை உள்ளது.ராமநாதபுரம் முழுவதும் பாதிக்கப்பட்ட நிலையில் நடவடிக்கை எடுக்க வேண்டிய மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளாமல் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளது. மக்கள் மிதக்கும் மழை நீரில் வேதனை அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X