பொது செய்தி

தமிழ்நாடு

ரயில்வேஅமைச்சருக்கு 200 தபால் கார்டுகள்

Added : டிச 01, 2019
Advertisement
 ரயில்வேஅமைச்சருக்கு  200 தபால் கார்டுகள்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் ரயில்வே ஸ்டேஷன் அமைக்க கோரி மத்திய ரயில்வே அமைச்சருக்கு 200 தபால் கார்டுகள் அனுப்பினர்.

வருவாய் குறைவால் 1993ல் தங்கச்சிமடத்தில் இருந்த ரயில்வே ஸ்டேஷனை நிர்வாகம் அகற்றியது. இந்நிலையில் தற்போது தங்கச்சிமடத்தில் மக்கள் தொகை பெருக்கம், வணிக வளர்ச்சி அடிப்படையில் மீண்டும் ரயில்வே ஸ்டேஷன் அமைக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர்.இந்நிலையில் நேற்று தங்கச்சிமடம் தபால் நிலையத்தில், ரயில்வே ஸ்டேஷன் மீட்பு குழு சார்பில் 200 பேர் தபால் கார்டுகளை மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு அனுப்பினர். இதில் மீட்பு குழு நிர்வாகிகள் ஞானப்பிரகாசம், முருகேசன், ரப்பானி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X