பொது செய்தி

தமிழ்நாடு

கடலுக்கு செல்லாத பரங்கிப்பேட்டை மீனவர்கள்

Added : டிச 01, 2019
Advertisement

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை கடல் பகுதியில் பலத்த காற்றுடன், கன மழை பெய்து வருவதால் மீனவர்கள் இரண்டாவது நாளாக நேற்றும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வில்லை.

பரங்கிப்பேட்டை கடற்கரையோர கிராமங்களான சாமியார்பேட்டை, புதுக்குப்பம், புதுப்பேட்டை, சின்னுார் உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மீனவர்கள், அன்னங்கோவில் முகத்துவாரம் வழியாக கடலுக்கு மீன் பிடிக்க சென்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து பரங்கிப்பேட்டை கடல் பகுதியில் பலத்த காற்றுடன் கன மழை பெய்து வருவதால், நேற்றும் மீனவர்கள் இரண்டாவது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

படகுகளை, அன்னங்கோவில் கடற்கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.இதனால், எப்போதும் பிசியாக இருக்கும் அன்னங்கோவில் மீன் இறங்கு தளம்,வெறிச்சோடி காணப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X